இலங்கையின் முதலாவது பெண் தலைமை நீதிபதி பதவி நீக்கம்
கொழும்பு: இலங்கையின் முதலாவது பெண் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் இன்று காலை அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கையெழுத்திட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இலங்கை தலைமை நீதிபதி சிராணியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ராஜபக்சேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இன்று கையெழுத்திட்ட ராஜபக்சே சிராணி பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சிராணி பண்டாரநாயக்க வரும் 15-ந் தேதி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட இருக்கிறார். புதிய தலைமை நீதிபதியை ராஜபக்சே அறிவிக்க இருக்கிறார். அனேகமாக சிராணி திலகவர்த்தன அல்லது மொஹான் பீரீஸ் ஆகிய ராஜபக்சே ஆதரவாளர்கள்தான் அடுத்த தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான ராஜபக்சேவின் நடவடிக்கையை ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இலங்கையிலும் சிராணிக்கு எதிரான ராஜபக்சேவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications