150 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக துபாயில் உலக வர்த்தக கண்காட்சி
துபாய்: 2020ம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சி நடத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டதில் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலக வர்த்தக கண்காட்சியான வேர்ல்டு எக்ஸ்போ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான கண்காட்சியை நடத்த பல்வேறு நாடுகள் போட்டி போட்டன.
போட்டியில் ரஷ்யாவின் எகாடெரின்பர்க், பிரேசிலின் சாவ் பாலோ, துருக்கியின் இஸ்மீர் ஆகியவை இருந்தன.

வென்ற துபாய்
வர்த்தக கண்காட்சியை நடத்தும் போட்டியில் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் தேர்வு செய்யப்பட்டது. பாரீஸில் நடந்த இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில் வானவேடிக்கைகள் விடப்பட்டன.

மத்திய கிழக்கு நாடு
உலக வர்த்தக கண்காட்சி முதன்முதலாக 1851ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டது. இதையடுத்து 150 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கண்காட்சி முதன் முறையாக ஒரு மத்திய கிழக்கு நாட்டு நகரில் நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

25 மில்லியன் பார்வையாளர்கள்
துபாயில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக கண்காட்சியை பார்க்க 25 மில்லியன் பேர் வருவாார்கள் என்றும், அதில் 70 சதவீதம் பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியில் இருந்து வருவார்கள் என்றும் துபாய் அரசியல் தலைவர்கள் நம்புகிறார்கள். இந்த கண்காட்சி மூலம் 2 லட்சத்து 77 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.

2015ம் ஆண்டில்
2015ம் ஆண்டுக்கான உலக வர்த்தக கண்காட்சி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications