ஜார்கண்ட் தேர்தலில் வெல்ல போவது யார்.. ஹேமந்த் சோரன் வைத்த முக்கிய பாயிண்டு! உற்று கவனிக்கும் மக்கள்
ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஜார்கண்ட்டில் குறிப்பிட்ட சமூகங்களைக் குறிவைத்து, சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சாடியுள்ளார்.
ஜார்கண்ட்டில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு இருக்கிறது. அங்கு ஏற்கனவே சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

ஜார்கண்ட்டை பொறுத்தவரை அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியும் எதிர் தரப்பில் பாஜகவும் தான் பிரதானமாகக் களத்தில் உள்ளன. அங்கு சில நாட்களில் வாக்குப்பதிவுக்கு நடைபெறும் நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பாஜக மீது சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஹேமந்த் சோரன்: அங்குள்ள குந்தி மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மக்களை பாஜக பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு உள்ளூர் மக்களின் பிரச்சினைகளை விட மாநிலத்தில் உள்ள வளங்கள் மீதே அதிக கவனம் இருப்பதாகவும் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "மாநிலத்தில் இருக்கும் பணம் மற்றும் கனிம வளங்கள் குறித்து மட்டுமே பாஜக குறியாக இருக்கிறது. மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை.. மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்பி சமூகத்தைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
பின்னணி: வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களால் ஜார்கண்டின் நிலம், பெண்கள் மற்றும் வாழ்வாதாரத்தை ஆபத்தில் தள்ளுவதாகச் சமீப காலமாக அங்குள்ள பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள். கடந்த பல மாதங்களாக ஜார்கண்டில் பிரச்சாரம் செய்து வரும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதே குற்றச்சாட்டைத் திரும்பத் திரும்ப முன்வைத்து வருகிறார். அதற்குப் பதிலடி தரும் வகையிலேயே ஹேமந்த் சோரன் பேசியிருக்கிறார்.
தாக்கு: தொடர்ந்து பேசிய ஹேமந்த் சோரன், "மணிப்பூரில் உள்ள பழங்குடிப் பெண்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்துப் பேசாமல் மவுனம் காக்கும் பிஸ்வா சர்மா, இங்கு நமது மாநிலத்திற்கு வந்து வகுப்புவாத விஷத்தைப் பரப்பி வருகிறார்..
பழங்குடியினரின் நிலங்களைச் சுரண்டுவதே பாஜகவின் கொள்கை. சத்தீஸ்கரில் என்ன நடந்தது எனப் பாருங்கள்.. அங்குள்ள ஹஸ்டியோ காட்டில் நுழையத் தனியார் நிறுவனங்களுக்கு பாஜக அனுமதி அளித்தது. இதனால் அங்குள்ள பழங்குடி சமூகங்கள் வேறு வழியின்றி இடம் பெயர்ந்தது. அதையே தான் ஜார்கண்டிலும் செய்யத் துடிக்கிறார்கள்.
முக்கியமான பாயிண்டு: கேஸ் சிலிண்டரை ரூ.500க்கு தருவதாக இங்கு வாக்குறுதி அளித்துள்ளனர். அப்படித் தர முடியும் என்றால் ஏன் அவர்கள் ஆட்சியில் இருக்கும் அசாம், சத்தீஸ்கர், பீகாரில் தரவில்லை. பாஜக ஒரு பிக்பாக்கெட் கட்சி.. மாநிலத்தின் வளங்களை மக்களிடம் இருந்து பறிப்பதே அவர்கள் நோக்கம்" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 இடங்கள் உள்ள நிலையில், அங்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. நவ. 13 மற்றும் நவ. 20 ஆகிய வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நவ. 23ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications