பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு.. சஞ்சய் ராய் குற்றவாளி.. கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு
கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வரும் 20 ஆம் தேதி தண்டனை விவரம் வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் ஆகஸ்ட் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். கொல்கத்தா போலீசார் அவரை கைது செய்தனர்.

பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்து உடனே தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதைப்போல் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்கத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதற்கிடையே, பெண் மருத்துவர் பலாத்கார கொலை என்பது மிகவும் கொடூரமானது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வரை விடுப்பில் செல்ல உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரைணையை சிபிஐ வசம் ஒப்படைத்து அதிரடியாக உத்தரவிட்டது.
இதற்கிடையே இந்த பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை வழக்கு சியல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ந்தேதி நிறைவடைந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இன்று மதியம் 2:30 மணியளவில் நீதிபதி அனீர்பான் தாஸ் தீர்ப்பை வெளியிட்டார். அதில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். வரும் 20 ஆம் தேதி திங்கட்கிழமை தண்டனை விவரங்கள் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் நீதிமன்ற வளாகத்தில்தான் இருந்தனர். பி.என்.எஸ் சட்டம் பிரிவு 64,66, மற்றும் 103(1) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா வழக்கில் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. டெல்லி நிர்பாயா வழக்கை போல பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மேற்கு வங்க பெண் மருத்துவர் பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை வழக்கு தீர்ப்பை நாடே எதிர்பார்த்து உள்ளது.
-
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications