ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் முதல் நாளே வெடித்த பஞ்சாயத்து! பாய்ந்து வந்த பாஜக எம்எல்ஏக்கள்!
ஸ்ரீநகர்: 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில்தான் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இன்று முதல் சட்டப்பேரவை கூட்டம் கூடப்பட்ட நிலையில், 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரி தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், முதல் நாளே அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டிக்கிறது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு, 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் தனியாகவும், லடாக் தனியாகவும் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து பல ஜனநாயக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

இப்படி இருக்கையில்தான் சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன், காங்கிரஸ் கை கோர்த்து போட்டியிட்டது. பிடிபி கட்சி தனியாகவும், பாஜக தனியாகவும் களம் கண்டன. இதில் தேசிய மாநாட்டு கட்சி+காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலின் பிரதான முழக்கமாக, ரத்து செய்யப்பட்ட 370 சட்டப்பிரிவை மீட்டுப்போம் என்று இந்த கூட்டணி வாக்குறுதியளித்திருந்தது.
இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று பிடிபி கட்சியின் எம்எல்ஏ, 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவது குறித்து தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே கூட்டத்தின் முதல் நாளே களேபரமாகியுள்ளது. தீர்மானத்தை பிடிபி எம்எல்ஏ வாபஸ் பெற வேண்டும் என்று பாஜகவின் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து சபாநயகர், தீர்மானத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று விளக்கமளித்தார். எனவே சலசலப்பு ஓய்ந்திருக்கிறது. 370 சட்டப்பிரிவை மீட்டெடுப்பது குறித்து பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இரண்டும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. ஆனால், யார் இதில் முந்திக்கொள்வது என்பது இரு கட்சிகளிடையே மோதலாக மாறியிருக்கிறது. மறுபுறம் 370 மீண்டும் கொண்டு வரப்படாது என பாஜக தெளிவாக கூறி வருகிறது.
இது தவிர, ஜம்மு காஷ்மீரில் கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து விவாதம் மேலெழுந்தது. நேற்று, லால் சவுக் எனும் பகுதியில் வார சந்தை நடைபெற்று வந்திருக்கிறது. இந்த சந்தையில், பொதுமக்கள் கூடியிருக்கும் நேரம் பார்த்து கையெறிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் ராணுவம் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் சிலர் சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications