ஏங்க இங்க பாருங்க.. டெங்கு கொசுவை ஒழிக்க தொழிற்சாலையில் கொசு வளர்க்கும் பிரேசில்.. புதுசா இருக்கே
பாரசிலியா: ‛முள்ளை முள்ளால் எடு' என்பது பழமொழி. அதேபோல் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிக்க பிரேசில் நாட்டில் விநோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை ஏற்படுத்தாத கொசுக்களை உற்பத்தி செய்ய பிரேசிலில் தனி பயோ தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு டெங்கு பாதிப்பை ஏற்படுத்தாத கொசுக்களை எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? அதன் பின்னணி என்ன? என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உள்பட பல நாடுகளில் டெங்கு காய்ச்சலால் ஏாளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு பாதிப்பில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த டெங்குவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் பிரேசிலும் ஒன்றும்.

பிரேசில் நாட்டை எடுத்து கொண்டால் அங்கு 21.2 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிரேசிலில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 66 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில்6,297 பேர் பலியாகினர்.
பிரேசிலை பொறுத்தவரை டெங்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் தான் டெங்குவதை தடுக்க பிரேசில் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அது என்னவென்றால் டெங்குவை பரப்பாத கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. பிரேசிலில் உள்ள குரிடிபா (Curitiba) நகரில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் Wolbito do Brasil ஆகும்.
பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம், உலக கொசு திட்டத்துக்கான Oswaldo Cruz அறக்கட்டளை மற்றும் Institute of Molecular Biology of Parana ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த ஆலை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வாரத்துக்கு 100 மில்லியன் (10 கோடி) கொசு முட்டைகளை உற்பத்தி செய்ய முடியும்.
இங்கு கொசுக்கள் தனியாக வளர்க்கப்படுகின்றன. கொசுக்களின் முட்டைகளில் இருந்து பிறக்கும் புதிய கொசுக்களுக்கு Wolbachia பாக்டீரியா செலுத்தப்படுகிறது. இந்த பாக்டீரியா என்பது கொசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அதோடு அந்த கொசுக்களிடம் இருந்து டெங்கு பரவுவதை தடுக்கும். இந்த வோல்பாச்சியா பாக்டீரியா கொசுக்களால் டெங்கு மட்டுமின்றி சிக்குன்குனியா, ஜிகா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. ஒருவேளை அந்த பாதிப்பு ஏற்பட்டாலும் மனிதர்கள் எளிதாக மீள முடியும்.
இந்த தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும்பிரேசிலில் சுமார் 1.40 கோடி மக்களை டெங்கு பாதிப்பில் இருந்து காக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அந்த ஆலையின் தலைமை நிர்வாகி லுசியானோ மொரிரா கூறுகையில்,‛‛ இந்த ஆலையை பயன்படுத்துக்கு ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் சுமார் 70 லட்சம் மக்களை டெங்கு பாதிப்பில் இருந்து எங்களால் காப்பாற்ற முடியும்'' என்றார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகையில், ‛‛டெங்கு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேரை பாதித்து வருகிறது. இந்த டெங்கு ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் பரவுகிறது. கடந்த ஆண்டு பிரேசிலில் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். 6,297 பேர் பலியாகினர். இப்போது நல்ல கொசுக்களை உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளது.
இந்த கொசுக்கள் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியில் விடப்படுகின்றன. குறிப்பாக டெங்குவால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் இந்த கொசுக்கள் சுதந்திரமாக விடப்படுகின்றன. இந்த கொசுக்கள் பிற கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தாத கொசுக்களை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications