16,000 ‛ஸ்டெப்’ நடந்ததால் பணி நீக்கம்..கோர்ட் வழியாக நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ஊழியர்.. கதறிய பாஸ்
பெய்ஜிங்: சீனாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் ஒரு நாளில் 16,000 ‛ஸ்டெப்' நடந்ததை சுட்டிக்காட்டி பணி நீக்கம் செய்தது. இந்த பணி நீக்கத்தை எதிர்த்து ஊழியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.15 லட்சம் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் தான் இந்த பணி நீக்கத்தின் பின்னணி மற்றும் நீதிமன்றம் போட்ட உத்தரவு பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் (Jiangsu Province) உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சென். இது அவரது குடும்ப பெயராகும் (Surname). இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்தார். இந்த விடுமுறை 2019 மார்ச் மாதம் வரை சென்றது.

அதாவது தொடர்ந்து பணி செய்ததால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஒரு மாதம் வரை விடுப்பு எடுத்தார். அதன்பிறகு சென் மீண்டும் அலுவலகம் வந்தார். அரை நாள் பணி செய்த நிலையில் மீண்டும் விடுமுறைக்கு விண்ணப்பம் செய்தார். இந்த முறை கால் வலி என்று கூறினார்.
அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றவர் மருத்துவர் ஒருவாரம் வரை ஓய்வு எடுக்கும்படி கூறிய மருத்துவ ஆவணங்களை அனுப்பினார். இதையடுத்து அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகும் அவர் கால்வலி சரியாகவில்லை என்று விடுப்பதை நீட்டிப்பு செய்தார்.
இதனால் நிறுவனம் அவர் மீது கோபமடைந்தது. ஆனால் நிறுவனம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியான சூழலில் சென் தனது மருத்துவ ஆவணங்களை நிறுவனத்திடம் வழங்கி விடுப்பு நீட்டிப்பு பற்றி விளக்கம் சொல்ல சென்றார்.
அப்போது காவலாளி அவரை நிறுவனத்துக்குள் விடவில்லை. அவரை பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் அறிவித்தது. அதோடு பணி நீக்கத்துக்கு நிறுவனம் கூறிய காரணம் அதிர்ச்சியாக அமைந்தது. அது என்னவென்றால், கால் வலியில் விடுப்பில் இருந்த சென் ஒரு நாளில் 16 ஆயிரம் ‛ஸ்டெப்' வரை நடந்துள்ளார். மருத்துவ ஆவணங்களை நிறுவனத்துக்கு திரும்பும்போது ஓடிவந்தார். இதனால் அவர் போலியான மருத்துவ ஆவணங்களில் விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக குற்றம்சாட்டி பணி நீக்கம் செய்தது.
இதனால் அதிர்ந்துபோன ஊழியர் நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. வழக்கில் சென் தரப்பு வாதம் மற்றும் நிறுவனம் தரப்பிலான வாதம் முன்வைக்கப்பட்டது. இறுதியாக சென்னின் மருத்துவ ஆவணங்களை பரிசீலனை செய்த நீதிமன்றம் அவர் மீது தவறு இல்லை என்று கூறியது. அதோடு அவரது பணி நீக்க நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறிய நீதிமன்றம் சென்னுக்கு ரூ.1,18,779 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15லட்சம்) நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென் அலுவலகத்தை நோக்கி ஓடி வருவதும், அவர் தினமும் எத்தனை ஸ்டெப் நடந்தார் என்பதை காட்டும் தொழில்நுட்பத்தையும் நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சமர்பித்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் சென்னின் மருத்துவ ஆவணங்கள் சரியானதாக இருந்ததாகவும், திடீர் பணி நீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறி இந்த தீர்ப்பை வழங்கியதாக சீனா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications