பதிலடியை தொடங்கிய உக்ரைன்.. சரமாரி ட்ரோன் தாக்குதல்! பற்றி எரியும் ரஷ்யா!
கீவ்: கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி வந்த நிலையில், தற்போது பதில் தாக்குதலை உக்ரைன் தொடங்கியிருக்கிறது. ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான சுர்குட்னெஃப்டிகாஸ் கிரீஷினெஃப்டியோர்க்சின்டெஸ் மீது உக்ரேன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் ட்ரோன் தாக்குதலை தடுத்துவிட்டதாகவும், சுட்டு வீழ்த்தப்படும்போது கீழே விழுந்த வெடிபொருட்களால்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் ரஷ்யா ராணுவம் கூறியிருக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து லெனின்கிராட் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ கூறுகையில், "கிரீஷி பகுதியில் மூன்று ட்ரோன்கள் அழிக்கப்பட்டன. அவை சுட்டு வீழ்த்தப்படும்போது அதன் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று கூறியிருக்கிறார். ஆனால் ட்ரோன் தாக்குதல் வெற்றியடைந்திருக்கிறது என உக்ரைனின் ட்ரோன் கமாண்ட் அறிவித்துள்ளது.
கிரீஷி சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு தோராயமாக 17.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 3,55,000 பேரல் எண்ணெய்யை சுத்திகரிக்கிறது. இது ரஷ்யாவின் மொத்த உற்பத்தியில் 6.4% ஆகும். இது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்திருப்பதால்தான் உக்ரைன் இதனை குறி வைத்து தாக்கியிருக்கிறது. உக்ரைன் தாக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது, ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில், லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள கிரிஷி நகரில் இருக்கிறது. இது உக்ரைனிலிருந்து சுமார் 1,500 கி.மீ தொலைவில் இருக்கிறது.
இவ்வளவு தூரத்திற்கு ட்ரோன் மூலம் எப்படி தாக்குதல் நடந்தது என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் எந்த ட்ரோனும் இவ்வளவு தொலைவுக்கு போகாது. எனவே லாரிகள் மூலம் ட்ரோன் இந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பாணியில் ஏற்கெனவே உக்ரைன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. அந்த வகையில் ரஷ்யா ஏற்கெனவே தாக்குதல் அனுவத்தை கொண்டிருந்தாலும், இந்த தாக்குதலை தடுக்க தவறியிருக்கிறது.
கிரிஷி நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தவிர, உக்ரைனிலிருந்து சுமார் 1,400 கிலோமீட்டர் தொலைவில் உஃபா நகரில் உள்ள மற்றொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீதும் உக்ரைன் நேற்று ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கிறது. உக்ரைன் நடத்தும் தாக்குதல்கள் ஒவ்வொன்றும் ரஷ்யாவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஏனெனில் எண்ணெய் விற்று வரும் காசு மூலம்தான் ரஷ்யா போரை நடத்துகிறது. இப்படி போர் நடத்த எது ஆதாரமோ அந்த இடத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எனவேதான் இந்த தாக்குதல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications