இறப்பதற்கு முன்பு பவதாரணி செய்த செயல்.. இளையராஜாவை சந்தித்து நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரணி கடந்த ஜனவரி 26 ஆம் தேதி காலமாகி இருந்தார். அவர் மறைவதற்கு முன்பு பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடலின் இசை அமைத்திருந்த நிலையில் அந்த வீடியோவை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு இருக்கிறார். அதோடு இளையராஜாவை நேரில் சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் இவருக்கு கார்த்திகேயன், யுவர் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் மூவருமே தன் தந்தையை போலவே இசை இசையில் தனித்திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று சொல்வது போல தான் இளையராஜாவின் மகள் மற்றும் மகன் இசையால் பலருடைய மனதை கவர்ந்து வருகிறார்கள்.

இளையராஜாவிற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதே நேரத்தில் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி பாடிய பாடல்கள் தேசிய விருதுகள் வாங்கி குவித்திருக்கிறது. அதுபோல பலருடைய மனம் கவர்ந்த பவதாரணி குரல் அதிகமான பாடல்களில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு சில பாடல்களை பாடி இருந்தாலும் அதுவும் தனித்துவமாக மிளிர்கிறது.
ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி 47 வயதிலேயே காலமானார். அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிருந்த நிலையில் அதை பெரிது படுத்தாத பவதாரணி பிறகு புற்றுநோயின் இறுதி கட்டத்தில் தான் அவருக்கு நோயின் தீவிரம் புரிந்திருக்கிறது. அதற்கு பிறகு பல மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் சரியாக நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி காலை 5 மணி அளவில் காலமாகி இருந்தார்.
இது இசை துறையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்ப வரைக்கும் பலரும் பவதாரணியின் பாடல்கள் ஒலிக்கப்படும் போது அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பவதாரணி இறப்பதற்கு முன்பு "பெண் கல்வி, உரிமைகள், விடுதலை" எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

அந்த வீடியோ பள்ளி கல்வித்துறை அமைச்சர் தன்னுடைய x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளபக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் "தமிழர்களின் பெருமை ஐயா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழ்நாடு கல்வித்துறையால் பெண் கல்வி உரிமைகள் விடுதலை எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது.
அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரணி அவர்களின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். ஐயா எங்களை அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழி அனுப்பி வைத்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். பவதாரணி பல பாடல்களை பாடி இருக்கிறார் அதுபோல தன்னுடைய தந்தை போலவே சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.
அதிலும் பவதாரணி இசை அமைத்த முதல் படமே இங்கிலீஷ் படம் தான். அதாவது நடிகை ரேவதி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான Mitr, my friend என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக பவதாரணி அறிமுகம் ஆகி இருந்தார். அதைத்தொடர்ந்து தான் தமிழ், கன்னடம், இந்தி என்று பல மொழிகளிலும் 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் காலமாவதற்கு முன்பு பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாடலில் இறுதியாக இசையமைத்து விட்டு போயிருக்கும் நிலையில் அந்த பாடல் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications