Sundari Neeyum Sundaran Naanum Serial:ஆஹா...இந்த சீரியலிலும் வந்துட்டாங்கய்யா ஃபார்முலாவுக்கு!
சென்னை: பெரும்பாலும் சீரியல் ஃபார்முலான்னு ஒண்ணு வச்சுக்கிட்டு பயணிக்கறாங்க. அதாவது.. ஆரம்பத்தில் நாயகன் நாயகி மோதலில் பயணிப்பாங்க.
ஒரு கட்டத்தில் கல்யாணம் செய்துக்க வேண்டிய கட்டாயம் வரும். கல்யாணம் செய்துகொண்ட பின்னர் முதலிரவு தள்ளிப் போகும். ஒரே வீட்டில் கணவன் மனைவி மாதிரி வாழ்வார்கள்.
உண்மையான கணவன் மனைவியாக இருந்திருக்க மாட்டார்கள். நாளடைவில் காதல் மலர்ந்து ஒருவருக்குள் ஒருவர் காதலை மறைத்து வைத்து, ஏக்கத்தை மறைத்து, ஆசையை மறைத்து வைத்து வாழும் வாழ்க்கையாக மட்டுமே பல மாதங்கள் வரை எபிசோட் நீண்டு கொண்டே போகும்.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் கதையும் இந்த வரிசையில் அண்மையில் சேர்ந்துள்ளது. இந்த சீரியல் ஆரம்பித்த புதிதில் தமிழும் வேலுவும் எலியும் பூனையுமாக இருந்தார்கள். வேலு அரசியல்வாதி. தமிழ் பள்ளி ஆசிரியை. இருவரும் உறவினர் என்பது ஒரு கட்டத்தில் தமிழுக்கு மட்டுமே தெரிய வரும் நிலையில் வேலுவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கிறாள்.

பாட்டி லதா
இருவருக்கும் பாட்டியான லதாவுக்கு வேலுவுக்கும் தமிழுக்கும் திருமணம் செய்துவைக்க விருப்பம். அதன்படி வேலுவுக்கும் தமிழ் மீது காதல் வர இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறாங்க பாட்டி. வேலுவுக்கு அப்போது தமிழ் தனது உறவுக்கார பெண் என்று தெரியவில்லை. ஆனால், தமிழுக்கு தெரிஞ்சு போகுது. வேலு தனது உறவு பையன்தான்னு தெரிஞ்சுதான் தமிழ் கல்யாணம் செய்துக்கறா.

குத்தமா போச்சாம்
தமிழுக்கும், வேலுவுக்கும் கல்யாணமாகி முதலிரவுக்கு ஏற்பாடும் நடந்து கொண்டு இருக்கிறது.முதலிரவு அறையில் வேலு தமிழின் பெட்டியில் ஒரு போட்டோவை பார்த்துடறான். அந்த போட்டோவில் பாட்டியுடன் தமிழின் தாத்தா இருக்கார். அதாவது தமிழின் தாத்தாவும், வேலுவின் பாட்டியும் உடன் பிறப்பாம். அதை மறைச்சு தமிழ் வேலுவை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புன்னு நினைக்கறான் வேலு.இது ஒரு குத்தமா போச்சாம்.

ஃபார்முலாவுக்கு வந்துட்டாங்கள்ல
இது ஒரு குத்தமா போச்சுன்னு.. ஃபார்முலாவை கையில எடுத்துக்கிட்டு.. முதலிரவை ரத்து பண்ணிட்டான் வேலு. இனி.. நீயா உன் தாலியை கழட்டி வச்சுட்டு உன் பிறந்த வீட்டுக்கு போகப் போறேன்னு சவால் விடறான். அந்த காட்சியை இன்னிக்கு சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் எபிசோடில் பார்க்கப் போறீங்க.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications