
செளதியில் டோஸ்ட்மாஸ்டர்ஸ் மாநாடு
-தமாமிலிருந்து பாலசுப்ரமணியன்
(ஸமில் டோஸ்ட்மாஸ்டர் கிளப் தலைவர்)
செளதி அரேபியாவில் கடந்த ஏப்ரல் 17,18 தேதிகளில் அல்கோபார் லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் 'டோஸ்ட் மாஸ்டர்ஸ் டிவிஷன் எப்' மாநாடு (Toastmasters Div F Conference) வெகு சிறப்பாக நடைபெற்றது.
செளதியில் வசிக்கும் இந்திய, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், வங்காளதேசம், இலங்கை மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 800 ஆங்கில பேச்சாளர்கள் (Toast masters) இதில் கலந்து கொண்டனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் கல்வியாளர்களும், ஆளுமை முன்னேற்ற தன்னார்வலர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
டோஸ்ட்மாஸ்டர் 2004ம் வருடத்திற்கான சிறந்த பேச்சாளர் விருது பெற்ற ராண்டி ஹார்வேயும், 2007ம் வருடத்திற்கான பேச்சாளர் விருது பெற்ற இந்தியாவைச் சேர்ந்த விகாஸ் ஜிங்கரனும் (இவர் அமெரிக்காவில் முதுநிலை பட்டம் படிக்கும் இளைஞர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தங்களது பேச்சு திறமைக்கான காரணங்களை விளக்கினர்.
இந்த விழா வெற்றிகரமாக நடக்க உழைத்த விழா குழுவினரை வழி நடத்தியவர் ஜுபைலை சேர்ந்த டோஸ்ட்மாஸ்டர் ஷாகுல் ஹமீது.
மேலும் விவரங்களுக்கு: www.toastmasters.org