For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸுக்கு லண்டனில் சிலை

By Staff
Google Oneindia Tamil News

Hawkings
லண்டன்: பிக் பாங் குறித்து பல அரிய தகவல்களை உலகுக்கு அளித்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸுக்கு காம்பிரிட்ஜ் பல்கலைக்கழ ஆசிரியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் 3 மீட்டர் உயர சிலையை நிர்மானிக்கவுள்ளனர்.

சக்கர நாற்காலியில் ஹாக்கிங்ஸ் அமர்ந்திருப்பதைப் போன்று இந்த சிலை வடிவமைக்கப்படவுள்ளது.

பிக் பாங்க் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த தகவல்களை உலகுக்கு அளித்தவர் ஹாக்கிங்ஸ். பிரபஞ்சம் உருவானதை தனது நூலில் மிக மிக எளிமையாக, அழகாக விளக்கியுள்ளார் ஹாக்கிங்ஸ். இன்றளவும் ஹாக்கிங்ஸின் பிக் பாங்க் தியரிதான் நமது பிரபஞ்சம் உருவானதன் வரலாற்றை நமக்கு விளக்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் ஹாக்கிங்ஸ் சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்நாளை கழித்துக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட பெருமை மிகு விஞ்ஞானிக்கு காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெண்கலச் சிலையை நிறுவ தீர்மானித்துள்ளனர்..

காம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில், ஹாக்கிங்ஸின் அலுவலகத்திற்கு அருகே இந்த சிலை வைக்கப்படவுள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் இதற்காக செலவிடப்படவுள்ளன.

ஈவ் ஷெப்பர்ட் என்ற பெண் சிற்பி இந்த சிலையை வடித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X