For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமி நேரம் - ஒரு மணி நேரம் விளக்கணைத்து அனுசரிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

டோரன்டோ: உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை தினத்தன்று அனுஸ்டிக்கப்படும் புவி நேரம் என்ற நிகழ்வு நேற்று நடைபெற்றது.

2007ம் ஆண்டு முதல் இந்த புவி நேரம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

உலக இயற்கை நிதியம். இந்த நிகழ்வின்போது உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், இல்லங்களில் அவசியம் இல்லாத விளக்குகளை ஒரு மணி நேரத்திற்கு அணைக்க அழைப்பு விடப்படும்.

புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது.

2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்தப் புவி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டதாகவும தெரிவிக்கப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓரா ஹவுஸ், ரோம் நகரின் கொலீசியம், அன்டார்டிக்காவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

இந்த ஆண்டு புவி நேரம், சனிக்கிழமை இரவு எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரை நடைபெற்றது.

இந்தியாவின் பல நகரங்களில் இந்த ஒரு மணி நேரமும் விளக்குகள் அணைக்கப்பட்டன. பல வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இது அனுசரிக்கப்பட்டது. சில பகுதிகளில் தெரு விளக்குகள் கூட அணைக்கப்பட்டன.

ஹைதராபாத்தில் உள்ள பார்ச்சூன் இன் ஸ்ரீ கன்யாநட்சத்திர ஹோட்டலில் மெழுகு வர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டன.

ரோம் நகரின் கொலோசியம் முதல் சிட்னியில் உள்ள ஓபரா ஹவுஸ் வரை உலகின் பல பகுதிகளிலும் இந்த விளக்கணைப்பு பிரசாரம் நடைபெற்றது.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.

தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள புகழ் பெற்ற வாட் அருண் புத்தர் கோவிலில் விளக்குகள் அணைக்கப்பட்டன. பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலா, ஸ்வீடன், டென்மார்க், ஹங்கேரி, போலந்து, லண்டன் உள்ளிட்டவற்றிலும் பூமி நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.

பூமி நேரத்தை முதலில் கடைப்பிடித்தது கிரீஸ் நாடுதான். அதேபோல ஏதென்ஸ் நகரமே கிட்டத்தட்ட இருளில் மூழ்கியதைப் போல காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளுடன் இருளில் ஊர்வலமும் நடத்தினர்.

உலகம் முழுவதும், 84 நாடுகளைச் சேர்ந்த 3200 நகரங்களில் இந்த பூமி நேரம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X