For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மு.இளங்கோவனுக்கு சிறந்த வலைப்பதிவர் விருது

By Staff
Google Oneindia Tamil News

Dr. Mu. Ilangovan
சென்னை: தமிழ்ஸ்டுடியோ.காம் இணையத் தளத்தின் சிறந்த வலைப்பதிவர் விருது முனைவர் மு.இளங்கோவனுக்குக் கிடைத்துள்ளது.

இந்த இணையத் தளத்தின் 8வது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.

நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில், உள்ள இக்சா மையத்தில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் இந்த விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்..

காலை 10 மணி முதல் 2 வரை - காலை நிகழ்வில் உலகத் திரைப்படங்கள் திரையிடல் நேரத்தில் கவிஞர். வைகை செல்வி அவர்களின் "ஒவ்வொரு சொட்டும்" ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெறும். இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

மாலை 3 மணி முதல் 7 மணி வரை குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 -4) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் திரு. ந. முருகேசப் பாண்டியன் அவர்கள் "இலக்கியமும் குறும்படங்களும்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.

என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.

மு. இளங்கோவனுக்கு சிறந்த பதிவருக்கான விருது..

இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்.

இவரது வலைப்பூ. http://www.muelangovan.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இரண்டாம் பகுதி: (4.30 - 5.30) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் பங்குபெறுகிறார்.

குறும்படங்களில் படத்தொகுப்பு குறித்து மிக நுணுக்கமான பலத்த தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெறலாம். திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த "நான் கடவுள்", "மரியாதை" போன்ற படங்களில் மட்டுமின்றி பல வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பகுதி: (5.30 - 6.30) - குறும்படங்கள் திரையிடல்

திரு. பத்மநாபன் அவர்கள் இயக்கிய "வினா", திரு. நித்தி அவர்கள் இயக்கிய "விடியலை நோக்கி" திரு. ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய "டுலெட்" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட திறனாய்வாளர் திருமதி. பிரசன்னா ராமசாமி அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

6.30 - 7 - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X