சென்னையில் மிஸ் இந்தியா அரவாணி அழகிப்போட்டி
சென்னை: அரவாணிகளை சமுதாயத்தில் ஒருவராக நினைத்து பழக வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் சென்னையில் வரும் டிசம்பரில் முதன் முறையாக மிஸ் இந்தியா அரவாணி அழகிப் போட்டி நடைபெறவுள்ளது.
அரவாணிகள் பற்றி இந்திய மக்களின் மனதில் தவறான கருத்துக்கள் பதிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த எண்ணத்தை மாற்றி, அவர்களை சமுதாயத்தில் ஒருவராக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் வளர்க்க ஐசிடபிள்யூஓ என்ற அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐசிடபிள்யூஓ சார்பில் அரவாணிகளுக்கு டிசம்பர் மாதத்தில் அகில இந்திய அளவில் அழகிப் போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அழகிக்கு மிஸ் இந்தியா அரவாணி பட்டம் வழங்கப்படும்.
இந்திய அளவில் இது போன்ற போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.