For Daily Alerts
Just In
வேளாங்கன்னி திருவிழா-சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவுகக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இவர்களுக்காக இந்த ஆண்டும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் கூறுகையில்,
மாதா ஆலய திருவிழாவையொட்டி சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெங்களூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை வரும் 20ம் தேதி முதல் இயக்க இருக்கிறது.
இந்த சிறப்பு பேருந்து வசதி வரும் செப்டம்பர் 10ம் தேதி வரை செயல்படும். இந்த பேருந்துகளி்ல் முன்பு பதிவு வசதியும் செய்யப்படுகிறது என்றார்.