For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர்ப் பற்றாக்குறையில் தார் பாலைவனத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம்- நம்மாழ்வார்

By Staff
Google Oneindia Tamil News

Nammazhwar
திருச்செங்கோடு: தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது தமிழ்நாடு தான் என்று இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டுக்குழு சார்பில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இயற்கை வேளாண்மையின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு பேசியதாவது:

பூமிக்கு தேவையான நீர் மேலேயிருந்து மழையாக, பனியாக வரவேண்டும். ஆனால், நாமோ பூமியை துளை போட்டு பூமிக்கு நடுவில் இருக்கிற நெருப்புக் குழம்பை நோக்கி போகிறோம்.

பாலையிலும் வளரும் பனைமரம் என்று சொல்வார்கள். ஆனால், வறட்சியால் தமிழகத்தில் பனைமரம் கூட செத்து போய் விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது மாநிலம் தான்.

தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

மலை மேல் மழை பெய்தால் தான் ஆறுகளில் தண்ணீர் கிடைக்கும். இதை அறிந்து தான் நீர் மேலாண்மையை கையாண்ட நம் முன்னோர், நம்மை ஆண்ட மன்னர்கள், வீணாகும் மழை நீரை சேமிக்க நாடு முழுவதும் 39 ஆயிரம் ஏரிகளை உருவாக்கினர்.

இன்று அந்த ஏரிகள் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகங்களாக காட்சி தருகின்றன.

ஆலை புகை, வாகனப்புகை போன்றவற்றால் பூமிக்கு மேல் 15 முதல் 20 கிமீ உயரத்தில் கரிவளையம் உருவாகியுள்ளது.

கரி வளையத்தால் பூமியை விட்டு வெளியேற முடியாத வெப்ப சக்தியால், துருவ பனிமலைகள் உருகுகின்றன.

அதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர பட்டினங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளன.

பூமி பந்தில் நிலப்பரப்பின் அளவு குறையும்போது இட நெருக்கடி, உணவு பஞ்சம், 'ஜெனடிக் டைவர்சிட்டி' எனும் மரபணு மாறுதல், வித்தியாசமான உணவு பழக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

இதே நிலையில் பூமியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களின் நீர் ஆதாரமான கங்கை நதி 20 ஆண்டுகளில் வற்றிப் போகும்.

இந்தியாவின் 141 மாவட்டங்களில் கடுமையான வறட்சி, வெள்ளம் போனறவை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த இயற்கையின் சக்தியோடு இணைந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும்.

அடிப்பகுதி காட்டுக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, நுனிப்பகுதி வீட்டுக்கு என்ற முறையில் உணவு சுழற்சி முறையை பின்பற்றி வந்தது வரைக்கும், உணவு சங்கிலி அறுந்து போகாமல் இருந்தது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் புவி வெப்பமடைவதை வரும் காலத்தில் தடுக்க முடியும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X