For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதய நோய் போக்கி சிரிக்க வைக்கும் வெங்காயம்

By Chakra
Google Oneindia Tamil News

உரிக்க உரிக்க கண்ணீர் வரும் வெங்காயம், மருத்துவகுணம் நிறைந்தது. இந்திய சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் வெங்காயம் பல்லாயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் காய்கறியாக பயிரிடப்படுகிறது.

வேதிப்பொருட்கள்:

வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம், கலந்துள்ளது. அல்லிசின், (நுண்ணியிர் எதிர்ப்புத்தன்மை கொண்டது) அல்லீன் ஆகியவை உள்ளன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கிறது. இது தவிர ஃபிளேவனாய்டுகள், பினோலிக் அமிலம், மற்றும் ஸ்டிரால்கள் காணப்படுகின்றன.

பயன்படும் பகுதிகள்:

தாவரத்தின் பசுமை இலைகள், செதில் இலைகளாலான குமிழ், தண்டு ஆகியவை பயன் தரக்கூடிய பகுதிகளாகும்.

இதய நோயை தடுக்கும்:

இதய நோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் ( சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க வல்லது.

கிருமிகளுக்கு எதிரானது. வலி நீக்கும், இருமல் தீர்க்கும். மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கு சிறந்த மருந்து. சளி, ஃப்ளு காய்ச்சல், இருமலுக்கு உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வலி நிவாரணி

பல் சொத்தைப்படுதல், மற்றும் வாயில் ஏற்படும் நோய்களுக்கு அருமருந்து.

காதில் வலி ஏற்பட்டால் வெங்காயத்தை நசுக்கி சாறு எடுத்து அதனை லேசாக சூடக்கி இளஞ்சூட்டில் விட்டால் காதுவலி போக்குகிறது.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் மாதவிடாய் தூண்டுகிறது. நீர் கடுப்பு நோயால் அவதிப்படுபவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டுமுறை சாப்பிடவேண்டும்.

English summary
Research shows that onions may help guard against many chronic diseases. That's probably because onions contain generous amounts of the flavonoid quercetin. Studies have shown that quercetin protects against cataracts, cardiovascular disease, and cancer. In addition, onions contain a variety of other naturally occurring chemicals known as organosulfur com-pounds that have been linked to lowering blood pressure and cholesterol levels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X