For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர்மூனுக்கும், ஜப்பான் சுனாமிக்கும் தொடர்பா?-விஞ்ஞானிகள் பதில்

By Chakra
Google Oneindia Tamil News

Super Moon
லண்டன்: நேற்று ஜப்பானையே உலுக்கிய சுனாமிக்கும், சூப்பர் மூனுக்கும் தொடர்பு இருக்குமோ என்பது தான் தற்போதைய ஹாட் டாக்.

நிலவு பூமிக்கு அருகில் வருவதைத் தான் சூப்பர் மூன் என்கிறார்கள். அவ்வாறு நிகழும்போது உலகில் பூகம்பம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்படும் என்று பீதி பரப்பட்டுள்ளது.

வரும் 19ம் தேதி சூப்பர் மூன் வருகிறது. அன்று நிலா பூமியில் இருந்து 2 லட்சத்து 21 ஆயிரத்து 567 மைல் தொலைவில் இருக்கும்.

இதனால் பூமியில் பேரழிவுகள் ஏற்படும் என்று பீதி கிளப்பப்பட்ட நிலையில் நேற்று திடீர் என்று ஜப்பானில் பயங்கர நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது.

இதையடுத்து இதற்கு சூப்பர் மூன் தான் காரணம் என்று புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது.

சூப்பர்மூனுக்கும் புயல், சுனாமி, நிலநடுக்கத்திற்கும் தொடர்புண்டு என்று பிரபல சோதிடவியல் நிபுணர் ரிச்சர்ட் நோல் கூறியதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. கடந்த 1979ம் ஆண்டு சூப்பர் மூன் என்ற வார்த்தையை உருவாக்கியவரே இந்த ரிச்சர்ட் தான்.

சோதிடர்கள் கணிப்பு ஒரு புறம் இருக்க, இதெல்லாம் சுத்த பேதமை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

English summary
The Japanese tsunami makes people to think whether supermoon is behind this?. Astrologers have predicted that moon is coming close to earth on march 19 which will trigger earthquakes, volcanic eruptions and other disasters. Since the Japanese tsunami happened just 2 days after the announcement of supermoon, people are wondering whether this is the reason behind the tsunami. Scientists have dismissed such suspicions as utter nonsense.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X