For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷார்ஜாவில் ந‌க‌ர‌த்தார் ச‌ங்க‌ 136 ஆவ‌து சந்திப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஷார்ஜா: ஷார்ஜாவில் உள்ள நகராத்தார் சங்கத்தினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆடல், பாடல் என பெண்களும், குழந்தைகளும் பங்கேற்ற போட்டிகள் கலந்துரையாடலில் களை கட்டியது.

கடல் கடந்து வசிக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம். அரபு நாடுகளில் வசிக்கும் செட்டிநாட்டு நகரத்தார்கள் தங்களுக்கென ஒரு சங்கம் அமைத்து ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் சந்தித்த கலந்துரையாடுகின்றனர்.

இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற நாளான நவம்பர் 11- 2011 அன்று ஷார்ஜாவில் உள்ள அல் – கத்தாரி பண்ணை இல்லத்தில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் சங்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட புதிய செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இறை வணக்கப் பாடல்களை குழந்தைகள் செல்வி.அபிராமி முத்துராமன்,செல்வி.ஐஸ்வர்யா முத்து மாணிக்கம் மற்றும் திரு.முத்து மாணிக்கம் ஆகியோர் பாடினார்கள்.

புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பும் அளித்து திரு.வீர.அழகப்பன் அவர்கள் தலைவர் உரை ஆற்றினார். அடுத்த கலந்துரையாடலில் இருந்து திரு.சோழபுரம் இரமேஷ் அவர்கள் தலைமையில் சங்க கூட்டங்கள் நடைபெறும் என பொதுக்குழுவால் தீர்மானிக்கப்பட்டு , நிர்வாகக் குழு, செயற் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்த கூட்டமைப்பில் இருந்து இதுவரை ரூ 56,70,614.00/- நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்குழுவின் மூலம் ரூ 11,41,500/- நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதையும் கூட்டத்தில் பெருமைபட நினைவு கூறப்பட்டது.

களை கட்டிய களை நிகழ்ச்சி

திருக்குறள் பொருளுரையோடு செல்வன்.இராமநாதன் முத்துக்கருப்பன் வழங்கினார். பெண்களுக்கான நடு வீட்டுக் கோலப் போட்டியில் ஆறு குழுக்களாக பிரிந்து மகளிர் கோலம் போட்டு அசத்தினர்.

குழந்தைகளின் இசையுடன் கூடிய பாடல்களும், செல்வி.சுபஸ்ரீ மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரின் இசையில்லா பாடல்களும் பாடப்பெற்றன. செல்வி.கண்ணாத்தாள் முத்துராமன் மற்றும் செல்வி.மெய்யம்மை வள்ளியப்பன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நகைச்சுவை மழை

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சன் டிவி யின் அசத்தப்போவது யாரு புகழ் தேவகோட்டை ராமநாதன் தன் நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கொள்ளை கொண்டார். மூன்று மணி நேரம் தன்னுடைய இலக்கியம் கலந்த நகைச்சுவை பேச்சால் அரங்கத்தில் உள்ளவர்களை சிரிப்பு மழையில் நனையவைத்தார்.

நினைவு பரிசுகள்

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும்,அனைத்து குடும்பத்தார்க்கும் சங்கத்தின் சார்பாக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.நன்றியுரை செயலாளர்,திரு.மு.சுவாமிநாதன் வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

English summary
Nagarathar Sangam's 136th meeting was held in Sharjah recently. Community members attended the function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X