For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் ச‌முதாய‌ப் பிர‌முக‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

Social activists given warm welcome in Dubai
துபாய்: இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆஜா, புருணை காயிதே மில்லத் பேரவை தலைவர் ஜபருல்லாஹ்,சென்னை தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரியின் தாளாள‌ர் காதர் ஷா ஆகியோருக்கு துபாய் ஈமான் ம‌ற்றும் அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வை ஆகிய‌வை இணைந்து நடத்திய வரவேற்பு நிகழ்ச்சி துபாய் கராச்சி தர்பார் அரங்கில் கடந்த 31ம் தேதி மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவரும், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளருமான குற்றாலம் ஏ.லியாகத் அலி தலைமை வகித்தார்.

விழாக்குழு செயலாள‌ர் காயல் ய‌ஹ்யா முஹையத்தீன் இறை வசனங்கள் ஓதினார்.அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாள‌ர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்றினார்.அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் துவக்கவுரையாற்றினார்,அமீரக பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அபுதாபி மண்டலச் செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், கடையநல்லூர் ஹபீபுல்லாஹ், ஆடிட்டர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் ஆகியோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துரையாற்றினர்.

தானிஷ் அஹமது பொறியியல் கல்லூரியின் தாளாளர் காதர் ஷா தனது ஏற்புரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களின் எளிய அணுகுமுறைகள் குறித்து வியந்து பாராட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் நடந்து கொள்ளும் விதம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆஜா தனது ஏற்புரையில், பொருளீட்ட வந்த இடத்தில் சமுதாய உணர்வோடு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவதை நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இந்தியா முழுவதற்கும் விளங்குவதாக குறிப்பிட்ட அவர் விரைவில் கர்நாடக முஸ்லிம் லீக் நண்பர்களின் அமீரக கிளையை துவக்க இருக்கும் செய்தியை குறிப்பிட்டு அதற்குரிய அனைத்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் இங்கு சிறப்பாக செயலாற்றி வரக்கூடிய அமீரக காயிதே மில்லத் பேரவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முடிவில், ஊடகத்துறை செயலாள‌ர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஈமான் துணை த‌லைவ‌ர் அஹ‌ம‌து முஹைதீன், அமீரக காயிதே மில்லத் பேரவை துணை பொருளாளர் எல‌ந்த‌க்குடி முத்த‌லிப் இக்பால்,செயலாள‌ர்கள் கீழக்கரை ஹமீது யாசின், தஞ்சை பாட்சா கனி மற்றும் அய்யம்பேட்டை ராஜாஜி காசிம்,சோனாப்பூர் ரஹமத்துல்லாஹ் நண்பர்கள்,முத்துப்பேட்டை நைனா முகம்மது,பொதக்குடி அப்துல் காதர், அஞ்சுகோட்டை அப்துல் ர‌சாக், திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன், தேவிப‌ட்டிண‌ம் கியாதுதீன், நிஜாம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சவூதி அரசின் அழைப்பின் பேரில் இந்திய நல்லெண்ணக்குழுவிற்கு தலைமையேற்று சென்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் புனித மக்காவிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனவருக்கும் வாழ்த்தையும் ஸலாத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

விரைவில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் அபுதாபியில் நடைபெற உள்ளதாகவும், கூட்டம் நடைபெறும் தேதியை ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்ததும் வெளியிடப்படும் என்றும் பேரவைத் தலைவர் லியாகத் அலி அறிவித்தார். இறுதியாக துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப் துஆவுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.

English summary
Dubai IMAN and UAE Kayidhe Millath peravai have jointly given a reception programme to IUML functionary Thasthakeer Ibrahim Aaja, Brunei Kaithe millath peravai head Jabarullah and Danish Ahmed college of engineering correspondent Kader Shah in Dubai on october 31.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X