For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீது செய்தாருக்கு நன்மையே செய்க

Google Oneindia Tamil News

ஒரு காட்டில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்போதும் யாரையாவது ஏமாற்றி, அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வதை பொழுதுபோக்காக கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்த வழியாக வந்த கொக்கு ஒன்றை அந்த நரி பார்த்தது. உடனே கொக்கினை ஏமாற்ற நினைத்த நரி, அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.

கூர்மையான அழகைக் கொண்ட கொக்கினால், தட்டிலிருந்த கஞ்சியை உண்ண முடியவில்லை...

வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

சில நாள் கழித்து கொக்கானது அந்த நரியை விருந்துக்கு அழைத்தது. வீட்டிற்கு வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு, ஒரு வாய் குறுகிய ஜாடியில் கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியினால் கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு 'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள். ஆனால் நான் அப்படியில்லை உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்" என்று கூறியபடியயே கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் நரி யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.

English summary
Always do good to others. If you do good to others it will return to you as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X