For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி கடைசி வெள்ளி…. வரலட்சுமி பூஜை… அம்மன் கோவில்களில் திரண்ட பெண்கள் கூட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி அம்மன் கோவில்களில் பெண் பக்தைகளின் கூட்டம் அலைமோதியது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் விஷேச பூஜைகள் செய்து அம்மனை வழிபடுகின்றனர்.

கடைசி வெள்ளி

கடைசி வெள்ளி

ஆடி மாதம் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

பக்தர்கள் வழிபாடு

பக்தர்கள் வழிபாடு

கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

பொங்கல் வைத்து

பொங்கல் வைத்து

பெண் பக்தர்கள் மழை தூரலையும் பொருட்படுத்தாமல் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பாம்பு புற்றுக்கு பால்

பாம்பு புற்றுக்கு பால்

ஆடிவெள்ளியில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. எனவே ஏராளமான பக்தர்கள் புற்றுக்கு பால் ஊற்றினர்.

வரலட்சுமி நோன்பு

வரலட்சுமி நோன்பு

ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வருகிறது. கணவரின் ஆயுள்பலம் அதிகரிக்கவும், குடும்ப ஒற்றுமைக்காவும் பெண்கள் இதனை கடைபிடிக்கின்றனர். இன்று வரலட்சுமி விரதம், ஆடி கடைசி வெள்ளி ஆகிய இரண்டு விஷேச தினங்களும் ஒன்றாக வந்த காரணத்தினால் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

English summary
Aadi festival is celebrated for the birth of the tamil month of Aadi. This festival is special for various Ammans. Sundays, Tuesdays and Fridays of this month are considered very auspicious. A lot of festivals are celebrated in the month of Aadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X