For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதி இந்திய தூதரக தலைமை உயரதிகாரிக்கு தம்மாமில் சிறப்பான வரவேற்பு

By Siva
Google Oneindia Tamil News

Saudi Arabia
சவூதி: சவூதி அரேபியா ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் புதிதாக (டி.சி.எம்.-டெப்யூட்டி சீஃப் ஆப் மிஷன்) தூதரக த‌லைமை உயரதிகாரி பொறுப்பேற்ற திரு. சிபி ஜார்ஜ் அவர்கள் கிழக்கு பிராந்தியம் தம்மாம் நகருக்கு ‌வந்தபோது தமி‌ழ்நாடு சமூக நல அமைப்பு பிரநிதிதிகள் அவரைச் சந்தித்து வா‌ழ்த்து தெரிவித்தனர். சவூதி அரேபியா இந்திய துதரகம் சிறப்பான சேவையை இந்தியர்களுக்கு வழங்கி வருவதாக குறிப்பிட்டனர்.

பிற வளைகுடா நாட்டு இந்திய துதரகங்களைக் காட்டிலும் சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகமானது சவாலான பணிகளை குறைந்த வசதி வாய்ப்புகளுக்கு மத்தியிலும் சிறப்பாக வழங்குவதாக பெருமிதப்பட்டனர்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தூதரக அதிகாரிகள் சுமார் 20 லட்சம் இந்தியர்களுக்கு பெரும் நிலப்பரப்பில் ஒவ்வொரு நகருக்கும் சென்று அளிக்கும் அலுவல் பணிகள் பாராட்டுதலுக்குரியவை. ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் எண்ணிக்கை கொண்ட கடவுச் சீட்டுகள் புதுப்பித்தல் பணி விரைவானதும் மிகச் சிறப்பானதும் ஆகும்.

உங்களுடைய தலைமையில் மேலும் சிறப்பான சேவையை இந்திய தூதரகம் வழங்க சவூதி கிழக்கு பிராந்திய இந்திய சமூகம் எதிர்பார்ப்பதாக தமி‌ழ்நாடு சமூக நல அமைப்பு கோரியது. திரு. சிபி ஜார்ஜ் அவர்களை தமிழ் சமூக பிரமுகரும் தம்மாம் பன்னாட்டு இந்திய பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினருமான திரு. திருநாவுக்கரசு, தம்மாம் தமி‌ழ்நாடு சமூக நல அமைப்பின் தலைவர் திரு. அப்துல் சத்தார், பொதுச் செயலாளர் சுரேஷ் பாரதி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடேஷ், திரு.பழனி, பொறியாளர் திரு.நவுஷத், திரு. ஃபாரூக் ரஜா, திரு. பாபு, திரு.‌டைட்டஸ், திரு. ராஜேந்திரன் திரு. ராபர்ட் ஜெரோம், திரு. ஆன்டணி, திரு. கிருஷ்ணன், திரு. ம‌னோ திரு. ஃபயாஸுர் ‌ரஹ்மான், திரு. ஜோஸ் ஆகியோர் சந்தித்தனர்.

English summary
Tamilnadu Social Welfare Association, Dammam gave a warm welcome to Mr. Sibi George who took charge recently as the new Deputy chief of mission of the Indian embassy in Riyadh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X