ரியாத் இந்தியன் சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி.. ஏராளமானோர் பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத் இந்தியன் சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரியாத் இந்தியன் சங்கத்தின் இப்தார் நிகழ்ச்சி ரியாதிலுள்ள மதீனா சூப்பர்மார்க்கெட் மண்டபத்தில் கடந்த 17ஆம் தேதி தலைவர் பாலச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. இதில் நோன்பின் முக்கியத்துவம், நோன்பு எதற்காக நோற்கப்படுகிறது, உண்ணாமலும் பருகாமலும் இருப்பது நோன்பு அல்ல என்றும் மனதளவிலும் உடலளவிலும் மற்றவரை காயப்படுத்தாமல் இருபவனே நோன்பாளி என்றும் தனது உரையை கூறி துவங்கி வைத்தார் லத்தீப் ஓமஷேரி.

Iftar ceremony conducted in Riyadh

இந்த விருந்துக்கு ஷிஹாப் கொடுங்காடு, ஜெயன் கொடுங்கல்லூர், ஷாஜி ஆலப்புழா, றாபி பாங்கோடு, அஷ்ரப், புஷ்பராஜ், உதய பானு, அலி ஆலுவா, சுதீர், ஷிபு உஸ்மான், சத்தார் காயங்குளம் ஆகியோர் முன்னிலை வகித்து நன்றி கூறினர். மேலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ரியாவின் செயலாளர் டென்னி எம்மத்தி, துணை-தலைவர் மெஹ்பூப், கலை மற்றும் கலாச்சார பொறுப்பாளர் ஷிஜு வாஹித் மற்றும் ரியாவின் அனைத்து உருபினர்களும் உறுதுணை புரிந்தனர்.

Iftar ceremony conducted in Riyadh

ரியாவின் தமிழ் பிரிவு துணை தலைவர் ஜெயவீரசேகரன் முடிவில் நன்றி உரை வாயிலாக நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Iftar ceremony conducted in Riyadh. Riyadh Indian Association conducted the Iftar ceremony.
Please Wait while comments are loading...