காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா.. உச்ச நீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு..விரைவில் விசாரணை
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்டகாலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதற்கு மத்தியில் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் அதனை கர்நாடகா அரசு ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டுக்கு உரிய முறையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இருந்தபோதிலும் கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை.
எனவே காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழி இல்லை என அண்மையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், ஆகஸ்டு மாதத்துக்கான எஞ்சியுள்ள நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!











Click it and Unblock the Notifications