For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழா: உற்சாக கொண்டாட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

துபாய்: அமீரகத் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய குடியரசு தின விழா 26.01.2014 ஞாயிற்றுக்கிழமை காலை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அபுதாபி இந்திய தூதரகத்தில் அமீரகத்துக்கான இந்திய தூதராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட டி.பி. சீத்தாராம் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையினை வாசித்தார்.

குடியரசு தினவிழா

இந்திய குடியரசு தினவிழா நாடுமுழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டுமல்லாது அமீரகத்திலும் இந்திய குடியரசுதினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்றனர்.

மூவர்ணக்கொடியேற்றம்

தூதரக வளாகத்தில் அனைவரும் செல்ல இடமில்லாத காரணத்தால் பலர் வெளியில் நின்று கொடியேற்றும் நிகழ்வினை கண்டு களித்தனர்.

குடியரசு தின உரை

கொடியேற்றத்துக்குப் பின்னர் இந்திய தூதர் தூதரகத்தின் வெளியே சென்று வெளியில் காத்திருந்த தொழிலாளர்களுடன் உரையாடினார்.

அபுதாபி பள்ளிகளில்

அபுதாபி இந்திய சமூக கலாச்சார மையம், அபுதாபி இந்தியப் பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

துபாயில் மூவர்ணக்கொடி

துபாய் இந்திய துணை தூதரகத்தின் சார்பில் துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்திய தேசியக் கொடியினை இந்திய கன்சல் ஜெனரல்அனுராக் பூஷன் ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையினை வாசித்தார்.

Thousands in Abu Dhabi mark Indian Republic Day with colour and song

கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

அதனைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா, அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

English summary
Thousands of people turned out to celebrate the 65th Indian Republic Day. More than 2,500 people from the community – businessmen, parents and children – all sporting patriotic attire assembled at the Abu Dhabi Indian School on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X