For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்திசாலியாக்கும் உயரம்... அன்பானவர்களாக்கும் குள்ளம்...

Google Oneindia Tamil News

லண்டன்:உயரம் குறைவாக இருப்பவர்களுக்கும், உயரமாக இருப்பவர்களுக்கும் இடையே அவர்களது உயரம் மட்டுமே வித்தியாசமாக இருப்பதில்லையாம். மாறாக அவர்களின் குணாதிசயங்களும் கூட நிறைய மாறுபடுமாம். மேலும் ஒரு ஆணின் உயரத்தை வைத்து அவர்களது குணங்களைக் கூறி விட முடியுமாம்.

புதிதாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்தான் இப்படி கணித்துள்ளனர். இந்த ஆய்வின்படி உயரம் குறைவாக இருப்பவர்களை விட உயரமாக இருப்பவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும், யாருக்கும் பயப்படாதவர்களுமாக இருப்பார்களாம்.

ஆனால் உயரம் குறைவாக இருப்பவர்கள் மற்றவர்களைப் பார்த்து எளிதில் பயப்படுவார்களாம். மேலும் அவ நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

ஆக்ஸ்போர்டின் ஆய்வு:

ஆக்ஸ்போர்டின் ஆய்வு:

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இதுபோல மேலும் சுவாரஸ்யமான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்காக கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு நடத்தியுள்ளனர்.

 உண்மையை தவிர வேறில்லை:

உண்மையை தவிர வேறில்லை:

இதுகுறித்து பேராசிரியர் டேணியல் ப்ரீமேன் என்பவர் கூறுகையில், "உண்மையான வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்வார்களோ அதேபோலத்தான் இந்த ஆய்விலும், கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்".

உயரம் குறைந்தால் உயரும் ஆயுள்:

உயரம் குறைந்தால் உயரும் ஆயுள்:

உயரம் குறைவாக இருப்பவர்களுக்குத்தான் நீடித்த ஆயுள் காலம் இருக்கிறதாம். உயரமாக இருப்பவர்களை விட இவர்கள் அதிக நாட்கள் வாழ்கிறார்களாம்.

சர்டினியா ஆண்கள்:

சர்டினியா ஆண்கள்:

இத்தாலிக்குச் சொந்தமான சர்டினியா என்ற தீவில் 1866 முதல் 1915ம் ஆண்டுக்கிடையே வாழ்ந்த ஆண்களின் வாழ்நாளை வைத்து கணக்கிடப்பட்டது. அதில் உயரமானவர்களை விட குள்ளமாக இருந்தவர்கள் சராசரியாக 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்துள்ளனர்.

குள்ளமானால் உள்ளம் நலமாகும்:

குள்ளமானால் உள்ளம் நலமாகும்:

ஆண்களைப் போலவே குள்ளமாக உள்ள பெண்களுக்கும் வாழ்நாள் அதிகமாக இருக்கிறதாம். மேலும் டிஎன்ஏ சேதாரம், செல் மாற்றம் போன்றவை தவிர்க்கப்படுகிறதாம். அதேபோல இதயத்திற்குள் ரத்தத்தை பம்ப் செய்வதும் குள்ளமாக இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கிறதாம்.

நெடுநெடுனு வளர்வது மூளையும்தான்:

நெடுநெடுனு வளர்வது மூளையும்தான்:

புத்திசாலித்தனத்தில் குள்ளமாக இருப்பவர்கள விட உயரமாக இருப்பவர்களின் கையே ஓங்கியுள்ளது. அதாவது உயரமாக இருப்பவர்கள்தான் பெரும்பாலும் புத்திசாலித்தனம் மிக்கவர்களாக உள்ளனராம்.

ஒண்ணுக்கொண்ணு பக்கதில:

ஒண்ணுக்கொண்ணு பக்கதில:

அதேபோல உயரமாக இருப்பவர்கள், தங்களைப் போலவே உயரமாக இருப்பவர்களுடன் ஜோடி சேரவே விரும்புகிறார்களாம்.

விண்ணைத் தொடும் சம்பளம்:

விண்ணைத் தொடும் சம்பளம்:

சம்பாதிப்பதிலும், குள்ளமானவர்களை விட உயரமாக இருப்பவர்களே முன்னிலையில் உள்ளனராம்.

லட்சியவாதி ஆக்கும் உயரம்:

லட்சியவாதி ஆக்கும் உயரம்:

குள்ளமாக உள்ள பெண்களுக்கு லட்சியத்தில் சற்று தொய்வு காணப்படுமாம். அதாவது உயரமான பெண்கள் பெரும்பாலும் லட்சியவாதிகளாக இருப்பார்களாம். ஆனால் குள்ளமான பெண்களிடம் அது சற்றுக் குறைவாகவே இருக்குமாம்.

குட்டையானாலும் கட்டித் தங்க கணவர்:

குட்டையானாலும் கட்டித் தங்க கணவர்:

மொத்தத்தில், உயரமாக இருப்பவர்கள் நிறைய சம்பாதித்தாலும், புத்திசாலிகளாக இருந்தாலும், நிறைய குழந்தை குட்டிகளைக் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தாலும், குள்ளமாக இருப்பவர்கள்தான் சிறந்த கணவர்களாக இருக்கிறார்களாம்.

English summary
Scientists say Short Man Syndrome really exists. In new tests, people who were "shrunk" became paranoid, distrustful and scared of others.Using virtual reality to reduce volunteers' heights, Oxford University researchers found they were more likely to think other people were staring at them or talking about them on a computer-generated train. Professor Daniel Freeman said, "We know people behave in VR as they do in real life." But what else does your height say about you? Today we check the evidence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X