தளை
Subscribe to Oneindia Tamil
நிலாக்களும்
நட்சத்திரங்களும்
தொலைந்து போன
ஒரு நள்ளிரவில்
இந்தக் கவிதை
பெளர்ணமியானது.
நிசியின் நாய்களெல்லாம்
குளிரொடுங்கிக் கத்த
வியாக்கியானத் தர்க்கம் தவிர்த்து
விண்ணில் பிரகாசமானது
அந்தக் கவிதை.
அலைகளின் கொந்தளிப்பும்
பாறைகளில் மோதிக் கக்கிய
நுரைக் குழம்பும் கவிதையின்
ஜொலிக் கீற்றால்
நவமணித் திவலைகளாயின.
பெளர்ணமி நிசியும்
தர்க்க முறைப்பும்
அலை நுரைக்கலும்
கவிதைக்குப் புதிதல்ல
இருப்பினும்......
தளையைச்சீவி சீராய்
அடியெடுத்து
தொடை தட்டி நிற்கும்
என் கவிதை.
- நெப்போலியன், சிங்கப்பூர்([email protected])












Click it and Unblock the Notifications