ஆட்சிகள் வெறும் காட்சியாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- யாழினி வளன்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருது
செருப்பினை கொண்டு தங்களை தாங்களே
அடித்துக்கொண்டதாக செய்தி வருகுது
இன்னும் என்ன என்னவெல்லாமோ சொல்லுது

புகைப்படம் பார்த்ததும் மெய்யாலுமே மனசு வலித்தது
செய்தி முழுவதும் படித்து முடித்ததும் கோபம் பொங்கி வந்தது

Poem on farmers

அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத
அவலங்களை ஆறுதலாக என்னவென்றுகூட கேட்காத
ஈரமற்ற மோடி அரசாங்கத்தின் மிதப்பு மீது கொஞ்சம் வந்தது

தமிழக விவசாயிகளின் வயித்திற்கான உரிமை கூக்குரலை
தன் இனத்தின் பிரச்சனை என்று முன்னெடுத்து செல்லாமல்
"அவர்கள் தனிவிருப்பம்" என்று தள்ளிநின்று பார்க்கும்
வீரமற்ற எடப்பாடி அரசாங்கம் மீது கொஞ்சம் வந்தது

அந்த செருப்புகளை செலுத்த வேண்டிய திசை தெரியாமல்
தங்களை தாங்களே அடித்துக் கொண்ட அந்த விவசாயி மேலே
அதை விட அதிகமாய் வந்தது

அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்
என்று நீங்கள் நினைத்தீர்களோ
அடிக்க தோன்றினால் அடித்து விடுங்கள்
அது நிச்சயமாய் உங்களை இல்லை

குழந்தையின் அழுகுரல் கேட்காதவள் தாய் என்று சொன்னால் தகுமா
மந்தையின் ஓசை கேளாதவன் மேய்ப்பாளன் என்று கூறினால் சரி ஆகுமா

குடிமகன் குரல் கேளாதவன் கிரீடம் சூடிக்கொண்டாலும் மன்னன் என்று ஆகுமா
ஜனநாயத்தின் அழுகுரலுக்கு செவிசாய்க்காத அரசாங்கம் நடத்துவது ஆட்சி ஆகுமா

Poem on farmers

இங்கு ஆட்சிகள் வெறும் காட்சியாய்
உங்க கண்ணீருக்கு யாரு சாட்சியோ

அரசின் தலை எழுத்தை எழுதும் பேனா
நாம் ஓட்டுப்போடும் மையில்
நாளை அரசன் யாரென்று சொல்லப்போகும் ஓட்டு
நம் ஒவ்வொருவர் கையில்
நாளை உன்னை பிச்சைக்காரனாக்கி ஓட்டுக்கு தரும் காசை
நீ போடாதே பையில்
நிமிர்ந்து மறுத்து நேர்மையாளனுக்கு ஓட்டளித்து இன்று வாட்டும் ஊழல்வாதிக்கு
நாளை போடு மண்ணை வாயில்

நாளை நாளை எனக் காத்திருந்தே
நகருது நாட்களும்
தேயும் நம்பிக்கைகளும்
கேட்கப்படா குரல்களும்
நிறைவேறா திட்டங்களும்
தீர்க்கப்படா பிரச்சனைகளும்
விவசாயின் கண்ணீரும்

நீங்க யாரோ நான் யாரோனு இருக்க முடியல
உங்க சோறை தான் தினமும் விழுங்குறேன்
அதனால தான் நானும் இதை எழுதுறேன்

உங்கள் செருப்புகளை உங்கள் காலிலே விட்டிருங்கள்
உழைத்து காய்ந்த உங்கள் பாதங்களை காக்க!
உங்கள் துடைப்பங்களை பாரத பிரதமருக்கு பரிசாக தலைநகரில் விட்டு வாருங்க
இந்தியாவில் சுத்தப்படுத்த வேண்டிய இடங்களும் மனசும் இன்னும் எத்தனையோ இருக்க!!!

TN Farmers protest starts in Delhi again-Oneindia Tamil

உங்களை மடி சேர்க்க செம்மண்ணும்
உங்கள் அழுகை துடைக்க மழையும்
உங்களை அணைத்துக்கொள்ள காத்தபடி
நீங்கள் நம்மண் திரும்பும் நாள் பார்த்தபடி !!!!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Our reader's poem on agitating farmers in Delhi.
Please Wait while comments are loading...