For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ்டர் மாணிக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சார் பிரின்சிபால் உங்கள வரச்சொன்னாங்க என்ற பூங்கொடியின் அறிவிப்பைக் கேட்டவுடன் நேராக முதல்வர்அறைக்கு விரைந்தேன். மேடம் மே ஐ கம் இன் .. இளம்வயது என்றாலும் முதல்வர் என்பதால் எல்லோரும் மேடம்என்றுதான் அழைப்போம். எஸ் கம் இன் என்ற அதிகாரம் கலந்த குரலில் பதில் வர உள்ளே சென்றேன். மிஸ்டர்மாணிக்கம் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். இன்று மாலை என் வீட்டிற்கு வாருங்கள். சரிஎன்று தலையாட்டிவிட்டு வந்தாலும் என்னவாக இருக்கும் என்று மனம் குழம்பியது.

இதுவரை நம்மை முதல்வர் வீட்டிற்கு அழைத்ததில்லை. ஆனாலும் தம்மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்.அந்தத் தனியார் ஆங்கிலப் பள்ளியில் சம்பளம் குறைவாக இருந்தாலும் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வேன். அதனால் மட்டுமல்லாது எல்லா ஆசிரியர்களுடனும் பேசக் கூடிய ஒரே ஆசிரியர்என்பதாலும் என்மீது தனிப்பாசம்.

ஒரு சமயம் என்னுடைய நிச்சயதார்த்தம் முதல்வருக்குத் தெரிந்திருக்குமோ ? நான்தான் கணக்கு ஆசிரியர்குமாரைத் தவிர யாரிடமும் கூறவில்லையே! பிறகு எப்படித் தெரியும் ? அவருக்குத் தெரிந்தால்தான் என்ன ?அதைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது ? இரண்டுமுறை அம்மா பார்த்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் வரை போய்நின்று போனதால் இந்த முறை யாரிடமும் முன்கூட்டியே சொல்லவில்லை.

Studentsஎதிரே வந்த தமிழ் ஆசிரியை என்ன மிஸ்டர் மாணிக்கம்.. முதல்வர பார்த்துட்டு வர்றீங்க .. தீபாவளி போனஸ் பற்றிஎதுவும் சொன்னாங்களா ? அந்த ஆசிரியை எப்பொழுதும் போனஸ், விடுமுறை பற்றி மட்டுமே அடிக்கடிகேட்பார். நான் சிரித்துக் கொண்டே போய்விடுவேன். அன்று சற்று நில்லுங்கள் என்று மறித்தார். என்ன என்பதுபோல் அவர் முகத்தைப் பார்த்தேன். நான் சொன்னது என்னாச்சு? அந்தப் பொண்ணு சாந்தி பாவம். அவள்உங்களையே நினைச்சு வாழ்ந்துகிட்டு இருக்கா. அவளுக்கு ஒரு நல்ல சேதி சொல்லுங்க, அவள் உங்களைத் தவிரவேறு எந்த ஆண் ஆசிரியர்களுடனும் பேசுவதில்லை. நீங்கள் இருவரும் காதலிப்பதாக பரவலாக எல்லோரும்பேசிக்கொள்கின்றனர். ஆனால் இதுவரை முதல்வருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்.

இம்முறை அவரிடமிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. எனக்கு நாளை மறுநாள் நிச்சயதார்த்தம். என்அத்தைமகள் தான் மணப்பெண். சொல்லியதும் அவர் அதிர்ந்ததை அவர் முகம் காட்டியது. ஏன் இவ்வளவு நாள்எங்களிடம் சொல்லவில்லை ? சற்று கோபமாகக் கேட்டார். சந்தர்ப்ப சூழ்நிலை சொல்ல முடியவில்லை. மன்னித்துவிடுங்கள். பதில் ஏதும் சொல்லாமல் விறுவிறுவென்று சென்றுவிட்டார். நான் நினைத்தது போலவே சாந்தியிடம்விஷயத்தைச் சொல்லிவிட்டார். அன்றே சாந்தி தமது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

குமார் வேகமாக ஓய்வறைக்கு வந்தார். மிஸ்டர் மாணிக்கம் தெரியுமா சேதி .. சாந்தி ரிசைன் பண்ணிட்டாங்க.சாயங்காலம் உங்களப் பார்த்துப் பேசவேண்டும் என்று சொன்னாங்க. இப்ப என்ன செய்வது ? முதல்வர் வீட்டுக்குப்போவதா ? சாந்தியைச் சந்திப்பதா ? குழப்பமாக இருந்தது. மிஸ்டர் மாணிக்கம் மறந்துடாதீங்க இன்றைக்குச்ஞாயங்காலம் நிச்சயதார்த்தப் பட்டுப் புடவை வாங்க வேண்டும். குமார் நினைவு படுத்தினார்.

மீண்டும் பூங்கொடி, சார் உங்கள முதல்வர் வரச்சொன்னாங்க. இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு உடனேகிளம்பினேன். மேடம் மே ஐ கம் இன் . எஸ் கம் இன். அதே அதிகாரம் கலந்த குரல். மிஸ்டர் மாணிக்கம் உங்களஇன்றைக்கு வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேன் இல்லியா ? ஐ ம் சாரி. புரோக்ராம சேஞ்ச் பண்ணிட்டேன். நீங்கபோகலாம். தேங்க்யூ மேடம் என்று சொல்லிவிட்டுத் திரும்பும்போது அவர் எதிரே உள்ள கண்ணாடியில் தம்கண்களில் அரும்பிய கண்ணீரைத் துடைப்பது தெரிந்தது.

அன்று மாலை சாந்தியைச் சந்திக்கப் போகவில்லை. ஒரு வாரம் கழித்து சாந்தியிடமிருந்து ஒரு கடிதம் .. இல்லை.சாந்தியின் திருமண அழைப்பிதழ்.. என்னுடைய திருமண தேதியிலேயே சாந்திக்கும் திருமணம்..புத்திசாலிப்பொண்ணு .. தனக்குள் நினைத்துக் கொண்டாலும் முதல்வரின் முகம் மட்டும் ஏனோ ஒருமுறை நினைவில்வந்து போனது.

-பொன்னாப்பூர் அர்ச்சுனன், சிங்கப்பூர்([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. ஞாபகம்


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X