அருவி தமிழ் ஆய்வு மையம்
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005
மதுரையில் தமிழ் ஆய்வு மையம் ஒன்று இப்புத்தாண்டில் (2005) உருவாக்கப்பட்டுள்ளது. என்பதுஅதன் பெயர். அருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
தமிழில் ஆய்வு பெருகி வளராத துறைகளில், கருத்தையும் கவனத்தையும் உருவாக்குவது அருவி தமிழ் ஆய்வு மையத்தின்நோக்கம்.
ஒருங்கிணைப்பும், ஊக்கமும் பெறாத சிறிய முயற்சிகள் - அடையாளமும் அங்கீகாரமும் அற்ற எளிய திறமைகள் - கால் ஊன்றிநிற்க நம்பகமான மேடை . மதுரையும் சென்னையும் ஆய்வு மையத்தின் களங்களாக இருக்கும்.
- தமிழ் (இளங்கலை, முதுகலை) பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதலும், பயிற்சியும் வழங்குவது.
- தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களோடு, கற்பிக்கும் முறைகள், திறன்கள் குறித்துத் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்துவது.
- தமிழ் ஆய்வுக்கென ஒரு சிறந்த நூலகம் அமைப்பது
- பதிப்பிக்கப்பெறாத சிறந்த ஆய்வுகளை பதிப்பிக்க உதவுவது
- புதிய ஆய்வுக்களங்களில் கருத்தரங்குகள் நடத்துவது
- சிறந்த ஆராய்ச்சி நூல்களுக்குப் பரிசளித்து அந்நூல்களின் சாராம்சத்தைத் தமிழகம் அறியச் செய்வது.
- அருவிப் பேச்சு என்ற காலாண்டிதழ் மூலம் தமிழ் ஆராய்ச்சி மற்றும் தமிழ் கற்பித்தல் முயற்சிகளை ஒருங்கிணைப்பது.
என அருவி தமிழ் ஆய்வு மையத்தின் கனவுகள் வளர்கின்றன.
முதல் கட்டமாக 2003, 2004ல் தமிழில் வெளியான மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, புதிய சிந்தனைக் களங்கள் தொடர்பானசிறந்த விமர்சன, ஆய்வு நூல்களைத் (10 நூல்கள்) தேர்ந்தெடுத்து, ஆய்வாளர்களும் பொதுமக்களும் பங்கேற்கும் விரிவானகூட்டத்தில் நூல்களை அறிமுகப்படுத்தி, ஒவ்வொரு நூலுக்கும் சுடர் ஆய்வுப் பரிசு ரூ.3000 வழங்க திட்டமிட்டுள்ளது.
அச்சேறாத கையெழுத்து, தட்டெழுத்துப் பிரதிகளும் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கத் தகுதியியானவையே. நூல்கள் அனுப்பவிரும்புவோர், இரு பிரதிகளை 15.4.2005க்குள் முனைவர் ச. மாடசாமி, 24, தேவ் அபார்ட்மெண்ட்ஸ், 7, கஸ்தூரிபா நகர் முதல்மெயின் ரோடு, அடையாறு, சென்னை - 20. (தொ.பே: 044-24401662) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-------------------------------------
போப்பு எழுதிய நாளைக்கு மழை பெய்யும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா மார்ச் 6ல் ஒசூரில் நடைபெற்றது. தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய இவ்விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார்,பிரளயன், லட்சுமணப்பெருமாள், பவா. செல்லத்துரை, ஷாஜகான், பொன்ஸீ, க.சீ. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெளியீடு: விகடன் பதிப்பகம்
விலை: ரூ.70
-------------------------------------
பாரதி புத்தகாலயத்தின் சேலம் கிளையான பாலம்- தி புக் மீட் தொடக்க விழா பிப்ரவரி 27ல் நடைபெற்றது. எழுத்தாளர்கள் பாலா,திலகவதி, சிற்பி, க.வை. பழனிச்சாமி, கோணங்கி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகங்களுக்கு, சகஸ்: 9443222007
-------------------------------------
பிப்ரவரி 27 மாலை திலகவதியின் நாவல்கள் (2 தொகுதிகள்) வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் பாலா,சிற்பி, தமிழ்நாடன், இயக்குநர் பாலுமகேந்திரா, சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவுடையான் பாடல்களின்ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டது.
புத்தக வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை.
(வாசகர்கள் தங்கள் பகுதியில் நடந்த, நடைபெறுகிற நிகழ்வுகளை புதுவிசையில் பதிவு செய்யலாம்)