2023 புத்தாண்டு ராசிபலன்..சனி தரப்போகும் யோகம்..அள்ளி அனுபவிக்கப்போகும் 4 ராசிக்காரர்கள்
சென்னை: 2023ஆம் ஆண்டு பிறந்து விட்டது. இந்த புத்தாண்டில் யாருக்கெல்லாம் வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரத்தில் தொழிலில் செய்யும் முதலீடுகள் யாருக்கு லாபத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம். கடந்த ஆண்டு வேலையை இழந்து தவிப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் புத்தாண்டில் பயணிக்க தொடங்குங்கள். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு இது பொதுவான பலன்தான். ஜாதக கட்டங்களில் உள்ள கிரகங்கள் மற்றும் அவரவர்கள் தசாபுத்திக்கு ஏற்ப பலன்கள் சிறிதளவு மாறுபடும்.
2023ஆம் ஆண்டில் முதலில் இடப்பெயர்ச்சியாவது சனிபகவான். சனியின் சஞ்சாரம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறப்போகிறது. கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவானின் பலம் அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி முதல் மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை கொட்டிக்கொடுப்பார்.
குரு பகவான் ஏப்ரல் மாத இறுதியில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் பயணத்தாலும், பார்வையாலும் குரு பகவானின் இடப்பெயர்ச்சியாலும் யாரெல்லாம் குபேர யோகத்தையும், தொழில் வியாபாரத்தையும் லாபத்தையும் பெறப்போகிறீர்கள் என்று பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். அர்த்தாஷ்டம சனி முடியப்போவதால் இந்த புத்தாண்டில் உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். சனிபகவானும் சாதகமான வீட்டிற்குச் செல்வதால் உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தான சனியால் உங்களுக்கு குல தெய்வத்தின் ஆசி கிடைக்கப்போகிறது. அலுவலகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். தொழில் சார்ந்த அனுபவங்கள் அதிகரிக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். உங்களுக்கு கடந்த காலங்களில் வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். பங்குச்சந்தைகளில் தேவையற்ற முதலீடுகளைத் தவிர்த்து விடவும். ராகு கேதுவின் பயணங்களாலும் இடப்பெயர்ச்சியாலும் இந்த ஆண்டு நிறைய பணம் சம்பாதிக்கப்போகிறீர்கள். குபேர யோகம் தேடி வரப்போவதால் இந்த ஆண்டு வெற்றியை நோக்கி உங்களின் பயணம் தொடங்கப்போகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடந்த காலங்களில் கிரகங்களின் சாதகமற்ற பயணத்தால் வேலையிழப்பை சந்தித்தீர்கள். இந்த ஆண்டு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வேலையில் புதிய வெற்றியை அடையப்போகிறீர்கள். அலுவலகத்தில் புதிய பதவி உயர்வு கிடைக்கும். சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் தரும் சச யோகம் நிறைய பண வரவை தரும். அதே நேரத்தில் உங்களின் பயணத்தில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது அவசியம். வியாபாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முதலீடுகளில் கவனமும் நிதானமும் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் மூலம் லாபம் அதிகரிக்கும். பண மழையில் நனைய தயாராகுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். வாழ்க்கையே போர்க்களம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 2023 புத்தாண்டு உங்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையப்போகிறது. பொருளாதாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கப்போகிறது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திட்டமிட்டு செலவு செய்யப்போகிறீர்கள். சனி பெயர்ச்சி சாதகமாக உள்ளது. ஏழரை சனி காலம் முடிவுக்கு வரப்போகிறது. இதுநாள் வரை ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. சொந்த தொழில் தொடங்குவதற்கான காலம் கை கூடி வந்து விட்டது என்றாலும் சில காலங்கள் வேலைக்கு செல்வதுதான் நன்மையைத் தரும். வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகள் செய்து நஷ்டத்தை சந்திக்க வேண்டாம். வேலையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கெள்ளுங்கள். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் இடப்பெயர்ச்சி சாதகமாக உள்ளது. மேஷ ராசியில் அமரப்போகும் குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்களே உங்களுக்கு மகிழ்ச்சிகரமான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ஜென்ம சனியால் உங்களுக்கு கடந்த காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். மனரீதியாகவும் சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த ஆண்டு உங்களின் பொருளாதார வளம் கூடும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் நஷ்டத்தை சந்தித்து வந்த உங்களுக்கு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அடையப்போகிறீர்கள். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அதற்கான காலம் கைகூடி வந்து விட்டது. திறமையானவர்களின் உதவியோடு தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு சில சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கிறது. உயரதிகாரிகளிடம் திறமைக்கு ஏற்ற மதிப்பும் அங்கீகாரமும் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். 2023ஆம் ஆண்டில் உங்களுடைய மனம் மகிழ்ச்சியடையும் வகையில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, உங்களுக்கு 2023 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ஏழரை சனியில் விரைய சனியால் கடந்த காலங்களில் நிறைய செலவுகளை சந்தித்து இருப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து இருப்பீர்கள் இந்த புத்தாண்டில் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். சனி பகவான் ஜென்ம சனியாக வந்து உங்கள் ராசியில் அமர்கிறார். வேலையில் இருப்பவர்கள் கடந்த காலங்களில் சில சோதனைகளை சந்தித்து இருப்பீர்கள். இந்த ஆண்டு திறமைகளை அதிகரித்து கூடுதல் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் லாபமும் அதிகரிக்கும். அகலக்கால் வைக்காதீர்கள் ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதிக கடன் வாங்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே உங்களுக்கு 2023ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் உங்களுக்கு தொழிலில் நிறைய லாபத்தை கொடுத்திருப்பார்கள். பண வருமானமும் இரட்டிப்பாக இருந்திருக்கும். இனி உங்களுக்கு சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் ஏழரை சனியாக விரைய ஸ்தானத்திற்கு வரப்போவதால் வேலையில் சுமை கூடும். அழுத்தமும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வருடத்தின் பிற்பகுதியில் புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். நிறைய சம்பளத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வும் கிடைக்கும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் இரட்டிப்பாகும் கடன் பிரச்சினை நீங்கும். வியாபாரிகளுக்கு லாபமும் அதனால் வருமானமும் அதிகரிக்கும். பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வது நல்லது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications