Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிர ஹோரையில் மாத்திரை சாப்பிட்டால் டக்குன்னு குணமாகுமாம்.. எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?

எந்த ஹோரையில் என்ன செய்யலாம்.. எந்த ஹோரையில் என்ன வாங்கலாம். எந்த ராசிக்காரர்களுக்கு என்ன ஹோரை ஏற்றது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல காரியம் செய்ய நாள் நட்சத்திரம், நேரம் பார்த்து செய்ய வேண்டும். பொதுவாக புதன்,குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்கள் எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்தால் நன்மையைத் தரும் என்று பார்க்கலாம்.

ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய அதிபதி சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.

மேஷம்

மேஷம்

சூரியன், செவ்வாய், குரு சுக்கிர ஹோரைகள் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள்,சொத்து சார்ந்த இனங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய், புதன், குரு ஹோரைகளில் பேசுவதால் நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன்,புதன், குரு, சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும். புதிய வீடு மனை வாங்கலாம். வாகனம், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும். புதிய முயற்சிகள், கல்வி, தொழில், உத்தியோகம், வீடு, மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.

 கடகம்

கடகம்

சந்திரன்,குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி, வேலை, பூமி சம்பந்தமான காரியங்கள், வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.

 சிம்மம்

சிம்மம்

பொதுவில் சூரியன், சந்திரன் , குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.

கன்னி

கன்னி

பொதுவில் சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.

துலாம்

துலாம்

பொதுவில் செவ்வாய், புதன், குரு, சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் சொத்து சார்ந்த இனங்கள்,அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி, வேலை, பூமி சம்பந்தமான காரியங்கள் வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.

தனுசு

தனுசு

பொதுவில் சூரியன், செவ்வாய், குரு, சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த இனங்கள்,அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் குரு ஹோரைகள் உத்தமம்.

மகரம்

மகரம்

பொதுவில் சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய்,சுக்கிர ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த இனங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய்,சுக்கிர ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.

மீனம்

மீனம்

பொதுவில் சூரியன், செவ்வாய், குரு, சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள், சொத்து சார்ந்த இனங்கள், அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய், புதன், குரு ஹோரைகள் நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+