Rasi Palan This Week: கன்னி ராசிக்கு சொத்துக்கள் குவியும் யோகம்.. தொட்டது துலங்கும் நேரம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்தும் அற்புதமாக இருக்கும். பெருமாள், நரசிம்மர் வழிபாடு செய்யக்கூடிய கன்னி ராசியினர் பெரிய ஏற்றத்தைப் பெறுவார்கள். பிள்ளைகள் விஷயத்திலும், துணை விஷயத்திலும் இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் மாறும். புதிய வண்டி, வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொழில் அமைப்பு, உத்தியோக அமைப்பு, வியாபார அமைப்பு என எல்லாவிதமும் நன்மையான சூழ்நிலைகளைப் பெற்றுத் தரும் நல்ல காலகட்டமாக இருக்கும். கண், காது, மூக்கு, தொண்டை, சளி, அலர்ஜி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
சொத்துக்கள் வந்து சேரும்
அரசாங்கத் தொழில், அரசு உத்தியோகம், அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான காலகட்டம். லாபங்கள் ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நல்ல நண்பர்கள், நல்ல பார்ட்னர்கள் அமைவார்கள். புதிதாக கிளப்பில் இணைவது, சமுதாயத்தில் பதவிக்காக முயற்சி செய்வீர்கள். அவை அனைத்தும் நடக்கும். சொத்து சார்ந்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். மனதில் இருக்கும் பாரங்கள், சங்கடங்கள் தீரும்.
பண வரவு
மன வலிமை அதிகரிக்கும். சூரியன், செவ்வாய் இணைந்திருக்கிறது. புதன் வக்கிரமாக இருக்கிறார். கழுத்து நரம்பு, சில பேருக்கு கால் தொடர்பான பாதிப்புகள் வந்து போகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. பண வரவு அற்புதமாக இருக்கும். சுக
ஸ்தானத்தில் 22 ம் தேதி சந்திரன் அமர்ந்திருந்து 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
மாற்றம் காத்திருக்கு
சனிக்கிழமை பெரிய மாற்றம் ஏற்படும். செவ்வாய் உச்ச பலத்தோடு தன் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சூரியன், புதன் கூடவே இருக்கிறது. திரிகோணத்தில் சனி அமர்ந்திருக்கிறது. ஆராய்ச்சி, படிப்பு, வங்கிக் கடன் போன்றவற்றை முடிப்பீர்கள். நினைத்த எல்லா விஷயங்களும் அடுத்தடுத்து முடியும். தைரியம், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.
வழிபாடு
விளையாட்டுத் துறை, ஐடி, சர்வீஸ் துறையில் இருப்பவர்கள், வண்டி, வாகனம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும். சந்தோஷம், பொருளாதாரம் இரண்டும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். வைத்தீஸ்வர சுவாமியை வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications