கும்பத்துக்கு பணம் கொட்டும்.. தொழில் பூமி விஷயங்களில் அதிர்ஷ்டம்..ஜென்ம சனி விலகி மகிழ்ச்சி பொங்கும்

Subscribe to Oneindia Tamil

பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மாசி முடிந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

Panuguni month rasi palan Astrology Kumbam

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.

விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.

இந்த பங்குனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி விலகுகிறது. காது மூக்கு தொண்டை வாய் தலை பாகங்களில் கவனமாக இருக்க வேண்டும். கால் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வாகனங்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். தெய்வ மார்க்க பயணங்கள் உண்டாகும். குருமார்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வேற்று மொழி பேசும் மனிதர்களால் உங்களுக்கு நல்ல ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். திருமணத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

சுப காரிய தடைகளில் நிவர்த்தி ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் விஷயங்களில் கோபதாபங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் வரும். பழைய நண்பர்கள், உறவினங்களை சந்திப்பதற்கான சூழல் உண்டாகும். நீண்டநாட்களாக மனத்தாங்கலாக இருந்து வந்த நண்பர்கள், உறவினர்கள் விஷயத்தில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தி ஏற்படும்.

தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சளி, வீசிங் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகன அமைப்பு, புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். இளைய பருவத்தினருக்கு எடுத்த முயற்சிகளில் எல்லாம் ஏற்றம் உண்டாகும். 55 வயதுக்கு உட்பட்ட கும்ப ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லாம் துலங்கும் யோகம். யோகமான காலகட்டமாக இருக்கும்.

தைரியம், நம்பிக்கை உண்டாகும். வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை ஏற்படும். எதிர்பார்க்காத அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். திட்டமிட்டு செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் ஏற்றம் உண்டாகும். நீண்டநாட்களாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

தொழில் ரீதியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம், அற்புதமான ஏற்றம் உண்டாகும். செல்வாக்குகள் கூடுவதை கண்கூடாக பார்ப்பீர்கள். பூமி விஷயங்களில் அதிஅற்புதமும், சந்தோஷமும் ஏற்படும். சுப காரியங்களை தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. சுப காரியங்களை நடத்தி முடிப்பது நல்லது. புதிய முயற்சி, பண வரவு, புதிய தொழில், குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு தைரியத்தைக் கொடுக்கும். எதிரிகள், சத்ருக்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். மொத்தத்தில் இந்த பங்குனி மாதம் உங்களுக்கு ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+