For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் நிறைவு- அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா முடிவடைந்த நிலையில் மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவடைவதால் ஏராளமானோர் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்ய வந்தனர். 10 நாட்களுக்கும் மேலாக மலை மீது எரிந்து கொண்டிருக்கும் மகா தீபத்தை தரிசித்த பக்தர்கள் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 19ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகா தீபம் காட்சி அளித்து வருகிறது.

Maha Deepa Darshan ends at Thiruvannamalai - Devotees wave at Arunachaleswarar Temple

கோவிலில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட திரி மற்றும் நெய் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. தீபத்திருவிழாவின் போது ஏற்றப்படும் மகா தீபத்தை அன்று நேரில் வந்து பார்க்க இயலாத பக்தர்கள் மகா தீபம் காட்சி அளிக்கும் மற்ற நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து மகா தீபத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர். பவுர்ணமி தினத்தில் வருகை தரும் பக்தர்கள் கூட்டம் போல் நேற்றும், இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சே‌ஷத்திரி, ரமணர் ஆசிரமம், அடிமுடி சித்தர் கோவில் உள்ளிட்ட சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிலர் ஆட்டோக்களில் சென்று அஷ்ட லிங்கங்களை தரிசனம் செய்தனர்.

தீபத் திருவிழாவின் போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இப்போதுதான் திருவிழா நடைபெறுவது போல பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. அருணாசலேஸ்வரர் சன்னதி அருகில் குறுக்கு வழியில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டதால் பலர் வாக்குவாதம் செய்தனர். இருந்த போதிலும் அந்த வழியாக தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

சிறப்பு தரிசன கட்டணம் செலுத்தியும் விரைந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனைப்பட்டனர். நேற்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பலர் ஆன்மிக சுற்றுலாவாக திருவண்ணாமலை வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
கார்த்திகை சோமவாரமான இன்றைய தினம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் 11வது நாளான இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து நாளை காலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். பின்னர் கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து வருகிற 20ஆம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு தீப மை வைக்கப்படும். பின்னர் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் தீப மை வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

English summary
Many people came to Thiruvannamalai to perform Sami Darshan as the Mahadeepam Darshan ends today. After waiting for more than 10 days for the devotees to see the majestic fire burning on the mountain for 3 hours, Sami performed darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X