2023 புத்தாண்டு ராசி பலன்: விமானம் ஏறி வெளிநாடு போகும் யோகம் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: கொரோனா கொடிய வைரஸ் பலரது வேலையை பறித்தது. வெளிநாட்டில் இருந்து சொந்த நாடு திரும்பியவர்கள் பலர் இருக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டோடு அடைந்து வேலை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 2022 ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. படிக்கவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்ல பலர் விரும்புவார்கள். இந்த புத்தாண்டில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்பை எந்த ராசிக்காரர்களுக்கு தரப்போகிறது என்று பார்க்கலாம்.
சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகத்தினை தீர்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடர்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமான கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது.
2023ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். தற்போது மிதுன ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் முதல் ராசியான மேஷ ராசிக்கு மே மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு கேது இடப்பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகுவும், துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரக மாற்றம் எந்தெந்த ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகத்தை அளிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்
காதல் நாயகன் சுக்கிரனை ராசிநாதனக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அஷ்டம சனி ஆட்டி படைத்தது. எத்தனையோ இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள். அதே நேரத்தில் குரு பகவான் உங்களை காப்பாற்றி வந்தார். ஜென்ம கேதுவும் ஏழாம் இடத்து ராகுவும் குடும்பத்தில் குழப்பத்தையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தி வந்தார். 2023ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு கஷ்டங்கள் நீங்கக் கூடிய காலம் வரப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் சனி பிள்ளைகளால் ஏற்பட்ட சஞ்சலங்களைத் தீர்ப்பார். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வந்து தன் பொன்னான பார்வையால் உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். நல்ல வேலை கிடைக்கும். வேலைக்காக செல்பவர்கள் வெளிநாட்டு பயணங்களை இந்த ஆண்டு தள்ளிப்போடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி யோகம் சரஸ்வதி யோகம் கைகூடி வரப்போகிறது. வெளியூர் சென்று படிக்க நினைப்பவர்களுக்கு நல்ல கால கட்டம். சின்ன சுற்றுலாவிற்காக விமானம் ஏற வேண்டியிருக்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு சற்றே போராட்டங்கள் நிறைந்த ஆண்டுதான். காரணம் அர்த்தாஷ்டம சனி ஒரு போராட்டத்தை ஏற்படுத்துவார். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்படும்.
அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நற்பலன்களைத் தரும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு மே மாதம் வரை கிடைக்கிறது நினைத்த இடத்தில் படிக்க யோகம் தேடி வரும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் ஆறாம் வீட்டில் மறையப்போகிறார். எந்த காரியத்திலும் கவனம் தேவை.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக 2023 ஆம் ஆண்டு இருக்க போகின்றது.எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன் சமாளிப்பீர்கள். ராசிநாதன் உங்கள் ராசியை பார்வையிடப்போவதால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். எதையும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு இது நன்மை தரக்கூடிய ஆண்டாக அமைகிறது. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். மேற்படிப்பு யோகம் அமையும் காரணம் மே மாதத்திற்குப் பிறகு குரு உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கேட்ட இடத்தில் கல்விக்காக வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் தேடி வரும். ராகு கேது பெயர்ச்சியும் நல்ல முறையில் நடைபெறப்போகிறது. அக்டோபர் முதல் நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீட்டில் கேதுவும் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். கேது பகவானால் செய்யும் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
2023ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு நல்ல ஆண்டாக அமையப்போகிறது. ஜென்ம சனி முடியப்போகிறது. 2023ஆம் ஆண்டு உங்களுக்கு பாதசனி சிரமங்களை ஏற்படுத்தும் என்றாலும் உங்களுக்கு இந்த ஆண்டு எல்லாமே நல்ல நேரம் தான். இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் பொங்கு சனி மூலம் ஆதாயம் அடைவார்கள். ஏந்த முயற்சி எடுத்தாலும் தடைகளை நீங்கி வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் அலைச்சல் எற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வேலை இடமாற்றம் கிடைத்தால் விரும்பி ஏற்று கொண்டு சென்றால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இந்த ஆண்டு ராகுவினால் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அடிக்கடி விமானத்தில் பறக்கப் போகிறீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். கேது பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வருகை புரிவது சிறப்பாகும். இதுவரை பத்தில் இருந்து வேலையில் அலைச்சல்களை, அடிக்கடி தொழில் மாற்றங்களை தொழில் நஷ்டங்களை தந்து வந்த கேது,இந்த வருடம் ஒன்பதாம் பாவத்துக்கு வருவது நல்லது.

கும்பம்
சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே... இந்த ஆண்டு உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு வந்து ஜென்ம சனியாக அமரப்போகிறார். சனி ராசியிலே சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஈசியாக முடியக்கூடிய வேலைகள் கூட இழுத்தடிக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள். ஜென்ம சனி நடக்கும் காலம் என்பதால் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள். குரு பகவான் பயணம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் எப்ரல் மாதம் வரை இருப்பதால் பண வரவு அதிகமாக இருக்கும். ஆட்சி பெற்ற குருவின் பார்வை பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் வேலையில் இருந்த சிரமங்கள் நீங்கும். மே மாதத்திற்குப் பிறகு குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழு, ஒன்பதாம் வீட்டுகளின் மீது விழுவதால் அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.

மீனம்
குருவை ராசிநாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே.. 2023ஆம் ஆண்டில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப்போகிறது. இந்த புத்தாண்டில் குருபகவான் இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்க காத்து கொண்டு இருக்கிறார். குருபகவான் இரண்டாம் இடத்திலே சஞ்சாரம் செய்யும் போது லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி கடாட்சத்தால் பணம் நிறைய வரும். அரசாங்க உதவி, மேலிடத்து அனுகூலம், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுநாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். சிலருக்கு வேண்டிய இட மாற்றங்ககளும் கிடைத்து குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு மந்தநிலை மறையும்.நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். அரசு உதவியும் சலுகைகளும் கிடைக்கும். மீனம் நீர் ராசி. குரு உங்கள் ராசியில் அமர்ந்து ஒன்பதாம் வீட்டை பார்த்து கொண்டு இருப்பதாலும், சனி 12ஆம் வீடான விரைய இருந்து இரண்டாம் வீட்டைப் பார்ப்பதாலும், ஒன்பதாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சென்று இளைஞர்கள் வேலை பார்க்க முடியும். அக்டோபர் மாதம் முதல் ராகு ஜென்ம ராசியில் அமர்வதால் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று ராகு,கேதுக்களுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அருகில் உள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வர ராகு கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும். பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து புளியோதரை படைத்து வணங்கலாம்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications