For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? 2016 ராசி பலன்கள் படியுங்களேன்!!

Google Oneindia Tamil News

ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

2016 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, ஜென்ம நட்சத்திரம், லக்கினம், பிறந்த காலத்தில் உள்ள தசை, தற்சமயம் நடைபெறும் தசை மற்றும் புக்தி, இன்றைய கோசாரம் ஆகியற்றிக்கு தக்கவாறு ஒவ்வொருக்கும் ஜாதக பலன்கள் மாறுபடும். 2016ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி ராகு சிம்மம் ராசிக்கும் கேது மீனம் ராசிக்கும் ஆகஸ்டு 11ம் தேதி குரு கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.

மேஷம்:

மேஷம்:

மேஷம் ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் ஏழாம் பாவத்தில் புதன் பத்தாம் பாவத்தில் குரு ஐந்தாம் பாவத்தில் சுக்கிரன் எட்டாம் பாவத்தில் சனி எட்டாம் பாவத்தில் ராகு ஆறாம் பாவத்தில் கேது பன்னிரெண்டாம் பாவத்தில் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நல்ல ஆண்டுதான். 2015 ல் வீண் விரயம் ஏமாற்றம் சஞ்சலம், மருத்துவ செலவுகள் கர்ம காரியங்கள் ஆகிய தீய பலன்களையும் கொடுத்தது. ராசி நாதன் செவ்வாய் ராசியை பார்ப்பதால் எடுக்கும் காரியம் கை கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.தேவையில்லாத பகை மறையும். சொத்து வீடு வாசல் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியங்களுக்கு கடன் வாங்க நேரிடும். சுக்கிரன் தனஸ்தானத்தை பார்ப்பதால் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும்.திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விசயங்கள் நடக்கும். அஷ்டமத்து சனி நடப்பதால் யாருக்கும் ஜாமின்,கடன் வாங்கி கொடுத்து மாட்டி கொள்ள கூடாது. பொன் பொருளை கவனமாக வைத்து கொள்ள வேண்டும். குடும்பத்தாரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சின்ன சின்ன குழப்பங்கள் தோன்றி மறையும் அஷ்டமத்து சனி ஒரு வார்த்தை வெல்லும்,ஓரு வார்த்தை கொல்லும் நிலையை உண்டாக்கும் வீண் வாக்குவாதம் உண்டாகும் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். வீண் விரையங்களை தவிர்த்து சுப விரையமாக மாற்ற மனை,வீடு வாசல் வாங்கலாம். நண்பர்கள் உற்றார் உறவினர் முலம் பிரச்சனைகள் வரலாம். விதண்டாவாதம் செய்து பொல்லாப்பை தேடுவதை விட வாய்மூடி ஓதுங்கி கொள்ளலாம்.மனைவி மக்களால் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். தாயின் உடல் நிலையில் அக்கரை காட்டுவது நல்லது. உங்க ராசிக்கு சந்திரன் சுகாதிபதி. அவரின் ஆதிக்கத்தில் ஆண்டு தொடங்குவதால் எல்லா பாக்கியமும் கிட்டும். செய்யும் தொழிலில் கவனமாகவும்,வீண் வாக்கு வாதத்தை தவிர்த்து கொண்டு வேலை மாற்றத்தையோ,வேலையை விடவோ வேண்டாம்.வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும்.வெற்றியை கொடுக்கும். அஷ்டம சனி என்பதால் சனிக்கிழமை தோறும் ஆஞ்சஜநேயர் வழிபாடு செய்யுங்கள் நற்பலன்கள் நடைபெறும்.

ரிஷபம்:

ரிஷபம்:

ரிஷபம் ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் எட்டாம் பாவத்தில் சந்திரன் நான்காம் பாவத்தில் செவ்வாய் ஆறாம் பாவத்தில் புதன் ஒன்பதாம் பாவத்தில் குரு நான்காம் பாவத்தில் சுக்கிரன் ஏழாம் பாவத்தில் சனி ஏழாம் பாவத்தில் ராகு ஐந்தாம் பாவத்தில் கேது பதினொன்றாம் பாவத்தில் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த முயற்சியும், வேலையும், தொழிலும் இல்லாமல் உடல் நிலையிலும் பிரச்சனையை கொடுத்த விஷயங்கள் மாறி இந்த ஆண்டு சோதனைகளை தாண்டி சாதிக்க வைக்கும் ஆண்டு. உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் ராசியை பார்ப்பது அடிப்படை தேவைகளும்,புகழ் கீர்த்தி அசையா சொத்துகள் வாங்கும் யோகத்தை கொடுக்கும். 9க்கும் 10க்குடையவரும் யோகாதிபதியான சனிபகவான் ராசியை பார்ப்பதால் இது வரை தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். கடந்த ஆண்டு வாங்கிய கடன் பிரச்சனைகள் தீரும். மறைமுக எதிப்புகள் போட்டிகள் மறையும்.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும் வம்பு வழக்குகள் மறையும்,குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடக்கும். சனியும் சுக்கிரனும் 7 ம் பாவத்தில் இருப்பதால் காதல் திருமணம் கலப்பு திருமணங்கள் நடக்கும்.காதல்
தோல்வியும் ஏற்படும். ஆண்டு தொடக்கத்திலேயே தொடக்கத்தில் ராகு கேது 4 லும் 10 லும் வருவாதல் வெளிநாட்டு முயற்சிகள் வேலை வாய்ப்புகள் அமையும்.கண்டக சனி நடப்பதால் கூட்டு தொழிலிலும் ,சுய தொழிலும் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் நண்பர்களின் விஷயத்திலும் கவனம் தேவை.

நீண்ட தூரம் வாகனப் பயணம் செய்பவர்கள் கவனமாக செல்லவும். எல்லா விசயத்திலும் தன்னம்பிக்கையும், தைரியமும் தேவை. எடுத்த காரியத்தில் கவனத்தை வைத்து நேரம் காலம் பார்த்து காரியத்தை முடிக்க வேண்டும். ஆண்டு பிறப்பது சந்திரனின் ஆதிக்கத்தில்.சந்திரன் உங்க ராசியில் தான் உச்சம் அடைகிறார். மனதை திடமாக வைத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்கள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளை நெய் தீபம் ஏற்றி தரிசனம் செய்யவும். துளசிமாலை சாற்றி வழிபடவும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் ஏழாம் பாவத்தில் சந்திரன் மூன்றாம் பாவத்தில் செவ்வாய் ஐந்தாம் பாவத்தில் புதன் எட்டாம் பாவத்தில் குரு மூன்றாம் பாவத்தில் சுக்கிரன் ஆறாம் பாவத்தில் சனி ஆறாம் பாவத்தில் ராகு நான்காம் பாவத்தில் கேது பத்தாம் பாவத்தில் இருக்கின்றனர். வருட தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சியாகி தைரிய ஸ்தானத்திலும்,பாக்கிய ஸ்தானத்த்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.இவ்வாறாக நல்ல பலன்களுடன் ஆண்டு தொடங்குகிறது. தைரியம் புருஷ லட்சணம் என்பது ஆன்றோர் வாக்கு கடந்த ஆறு மாதமாக உங்களை வாட்டி வதைத்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.தனாதிபதி 3ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதாலும்,தனகாரகன் சேர்க்கை பெற்றதாலும் பொருளாதர அபிவிருத்தி உண்டாகும்,நீண்ட நாள் எண்ணம் திட்டம் செயல் வெற்றி பெறும்.கடந்த காலத்தில் உங்களை தவறாகவும்,ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உங்களை நாடி வரும் ஆண்டாக அமையும். ராசிநாதன் புதன் ராசியை பார்ப்பதாலும், குருவும் சூரியனும் பரிவர்த்தனை பெற்றதால் மனைவி வகையில் செல்வாக்கு சொத்து சுக சேர்க்கை,வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உண்டு.திருமணம் சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பகுதியில் நட

க்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன்பட நேரிடும்.6 ல் சனி சுக்கிரன் சேர்க்கை உள்ளதால் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனைவிக்கு சிறிய வைத்திய செலவும் செய்யும் நிலை வரும். தொழிலில் அதிக விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். எதிரியின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகலாம்.ஓவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் 12 வருஷத்துக்கு ஓரு முறை,18 வருஷத்துக்கு ஒரு முறை,30 வருஷத்துக்கு ஒரு முறை மாற்றங்கள் வரும். 30 வருஷம் வாழ்ந்தவரும் இல்லை.30 வருஷம் கெட்டவரும் இல்லை என்பது ஜோதிடர்களால் கூறப்படும் கருத்து. கன்னியா லக்னத்தில் ஆண்டு பிறந்து உங்க ராசிக்கு நான்காம் ராசியில் ஆண்டு பிறப்பதால் கௌரவம்,செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ் பெருமை,ஆற்றல் மிகுந்த ஆண்டு. நன்மைகள் அதிகமாக சேரும்.

கடகம்:

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் ஆறாம் பாவத்தில் ராசிநாதன் சந்திரன் இரண்டாம் பாவத்தில் செவ்வாய் நான்காம் பாவத்தில் புதன் ஏழாம் பாவத்தில் குரு இரண்டாம் பாவத்தில் சுக்கிரன் ஐந்தாம் பாவத்தில் சனி ஐந்தாம் பாவத்தில் ராகு மூன்றாம் பாவத்தில் கேது ஒன்பதாம் பாவத்தில் இருக்கின்றனர்.

இரண்டாம் இடத்தில் குரு சந்திர யோகத்துடன் ஆண்டு தொடங்குவதால் காரியசித்தி சுப நிகழ்ச்சி பொருளாதார லாபம். எடுத்த காரியம் கை கூடும். தர்மத்தால் அதர்மத்தை அழிப்பிர்கள். வாக்கும் சொல்லும் சரியாக செயல்படும் ஆண்டு. ஓரு ராசிக்கு கேந்திராதிபதியாக வரும் கிரகம் திரிகோணதிபாதியாக வந்தால் அந்த கிரகம் ராஜயோகாதிபதியாவர்.அந்த வகையில் செவ்வாய் ஆண்டு தொடங்கும் பொழுது செவ்வாய் 4 ல் பலம் பெற்று பத்தாம் வீடு மற்றும்11ம் வீடு ஆகியவற்றை செவ்வாயின் பார்வை பெற்று பலம் பெறுவதால் வீடு நிலபுலன்கள் ஆதாயம் தரும். புது வாகனம் வாங்குதல், வாகன மாற்றம் புதியதாக சொத்துகள் வாங்கும் வாய்ப்புகள் பெறக்கூடிய காலம்.

ஆண்டு தொடக்கத்தில் ராகு கேது பெயர்ச்சியாகி இரண்டாம் வீடு எட்டாம் வீடு மாறுவதால் இது வரை இருந்த போட்டி பொறாமைகளை ராகு கேது அழிப்பார்கள். புதிய வேலை வாய்ப்பு,வெளிநாட்டு பயணம் அமையும்.குடும்பத்தில் வீண் வாக்கு வாதத்தை குறைத்து கொள்ளுங்கள். பிள்ளைகள் படிப்பு செலவுக்கு பொருளாதர வசதிகள் கிடைக்கும்..குல தெய்வ அனுகிரகம் தரும் ஆண்டு..பொறுமையை கடைபிடித்து வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் ஐந்தாம் பாவத்தில் சந்திரன் உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய் நான்காம் பாவத்தில் புதன் ஆறாம் பாவத்தில் குரு ஜென்ம ராசியில் சுக்கிரன் நான்காம் பாவத்தில் சனி நான்காம் பாவத்தில் ராகு இரண்டாம் பாவத்தில் கேது எட்டாம் பாவத்தில் இருக்கின்றனர்.

உங்கள் ராசி நாதன் சூரியன் குருவின் வீட்டிலும் குரு உங்கள் ஜென்ம ராசியிலுமாக பரிவர்த்தனையில் ஆண்டு தொடங்குவதால் கௌரவம் செயல் தன்மை கீர்த்தி செல்வாக்கு புகழ் பெருமை தேடி வரும் ஆண்டு ஆக அமைகிறது. தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். சமயோசித புத்தியால் நினைக்கும் காரியம் வெற்றி பெறும்,புது முயற்சிகள் வெற்றியையும் ஆதாயத்தையும் தரும்.குடும்பத்தில் நிம்மதியான போக்கு நிலவும்.பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்ற நிலை மாதிரி தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும்.குடும்பத்தில் சுப மங்கள விசயங்கள் நடைபெறும். இது நாள் வரை தடைப்பட்ட திருமணம்,புத்திரபாக்கிய தடைகள் விலகி குடும்பத்தில் சுபகாரியம் நல்ல செய்திகள் வரும். உத்தியோகத்தில் பணிமாற்றம் பதவி உயர்வு விரும்பிய ஊர்களுக்கு மாற்றம் கிடைக்கும்.புதிய தொழில் முயற்சிகளை தொடங்கி பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.உங்களின் நீண்ட கால கனவுகளும் லட்சியங்கள் நிறைவேறும். கடந்த ஓன்றறை ஆண்டுகளாக 2 ல் ராகு 8 ல் கேது இருந்ததால் போட்டி பொறாமை,எதிரி,கோர்ட் வம்பு வழக்குகள் தவிடு பொடி செய்திர்கள். இப்பொழது ராகு ஜென்ம ராசியிலும் கேது 7 ல் சஞ்சரிப்பதால் மன தடுமாற்றம் குழப்பம் ஏற்படும்.

படும்பாடு பட்டு பதவியை தக்க வைத்து கொள்வீர்கள். நடைமுறையில் காசு பணம் வைத்து எல்லாவற்றையும் சாதிக்கலாம். எல்லா வகையிலும் சிம்மராசிக்கு யோகம் இருந்தாலும் ராசியில் உள்ள ராகுவை சனி பார்ப்பதால் கர்மாவின் விதிப்படி பல்லாக்கிலும் ஏறலாம். கர்மாவினை சரியில்லை என்றால் கஷ்ட நிலையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்

கன்னி:

கன்னி:

கன்னி ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் நான்காம் பாவத்தில் சந்திரன் பன்னிரெண்டாம் பாவத்தில் செவ்வாய் இரண்டாம் பாவத்தில் புதன் ஐந்தாம் பாவத்தில் குரு பன்னிரெண்டாம் பாவத்தில் சுக்கிரன் மூன்றாம் பாவத்தில் சனி மூன்றாம் பாவத்தில் ராகு ஜென்மராசியில் கேது ஏழாம் பாவத்தில் இருக்கின்றனர். சூரியன் குருவின் வீட்டில்,குரு சூரியன் வீட்டில் இருவரும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்துள்ளனர். கிரகங்கள் பரிவர்த்தனை என்பது ஸ்தானங்களில் மாறி இருந்தாலும் அதனுடைய பலன்கள் இருக்க வேண்டிய இடத்தின் பலன்தான். எனவே குரு 4ல் நின்று பத்தாம் வீட்டை பார்த்த பலன் புதன் ராசியில் உச்சம் பெற்ற பலன்கள் கிடைக்கும். கடந்த ஆண்டு உங்களை வாட்டி வதைத்த கிரக நிலைகள் இந்த ஆண்டு சாதகமான திருப்பத்தை தரும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக வாய்ப்புகள் வந்தாலும் கடைசி நேரத்தில் கை நழுவி போயிருக்கும். இனிமேல் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். காரியசித்தி,புகழ் அந்தஸ்து உயரும்.வருமானம் பெருகும். பிள்ளைகள் முன்னேற்றமும் சுபகாரியம் நடக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியவில்லை என்ற நிலைமாறி எல்லா செயலும் திருப்தி தரும். பணத்தேவைகளில் திருப்தி உண்டாகும். இது வரை ராசியில் ராகு 7ல் கேது எந்த காரியத்தை தொட்டாலும் ஏமாற்றம் சஞ்சலம் என்ற நிலைமாறி ராகு கேது 12 மிடம் கேது 6 மிடம் வருவது வெளிநாட்டு முயற்சிகள் தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுத்து முன்னேற்றத்தை தரும் வாகன மாற்றம்,புது வாகனம் வாங்கும் யோகம்,புதுமனை குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உற்றார் உறவினர் பகை மறையும். இது வரை எத்தனையோ கோயிலுக்கு போனாலும்,பரிகாரம் செய்தாலும் நடக்காத காரியங்கள் இப்பொழது நடக்கும் ஏன் என்றால் இரண்டு திரிகோனாதிபதிகள் அதாவது புதனும் சனியும் ஓன்று சேர்ந்து 3ல் நின்று 9 ம் வீட்டை பார்ப்பதால் தெய்வ அனுகூலத்தால் காரியசித்தியும், குலதெய்வ அருளால் எல்லா முயற்ச்சிகளும் வெற்றியடையும். உயர் பதவியில் இருப்பவர்களும், அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர்களும் ஜென்ம குரு பதவியை பறித்து விடும் என்று பயப்படுவார்கள். ஜாதகம் சாதகமாக இருந்தால் கவலைபட வேண்டாம். சில கால சூழ்நிலைகள் நம்மை முடக்கி தான் பார்க்கும் வருவது வரட்டும் பார்த்துகொள்ளலாம் என்ற திடமான நம்பிக்கையே வாழ்க்கை.அதனால் பிறக்கும் ஆண்டு நல்ல முன்னேற்றத்தை தரும்.

துலாம்:

துலாம்:

துலாம் ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் மூன்றாம் பாவத்தில் சந்திரன் பதினொன்றாம் பாவத்தில் செவ்வாய் ஜென்ம ராசியில் புதன் நான்காம் பாவத்தில் குரு பதினொன்றாம் பாவத்தில் சுக்கிரன் இரண்டாம் பாவத்தில் சனி இரண்டாம் பாவத்தில் ராகு பன்னிரெண்டாம் பாவத்தில் கேது ஆறாம் பாவத்தில் இருக்கின்றனர். 11ல் குருசந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை அம்சத்துடன் ஆண்டு தொடங்குகிறது. அசுப தன்மை பெற்ற ராகு கேது மறைந்து ஆண்டு தொடங்குவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்ற வாக்கின் படி தன வருமானம் அதிகரிக்கும். இது நாள் வரை ஏழரைசனி பாத சனியாக இருப்பதால் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை,கடனுக்கு வட்டி கட்டுவதும் ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைத்து பாம்பின் வாயில் அகப்பட்ட தவக்களை போல வாழ்க்கை ஓடியது. சிலர் தொழிலை நடத்த சின்ன கடனை வாங்கி அதை பலமடங்கு வட்டி கட்டியது தான் மிச்சம். சோதனை வேதனைகள் குறைய கூடிய ஆண்டு இது. சிலர் வீடு கட்டும் ஆசையில் வீடு கட்டத் தொடங்கி அதுவும் பாதியிலேயே நிற்கிறது. சிலர் வேலைக்கு முயற்சி செய்தும் இப்ப வரும் அப்ப கிடைக்கும் என்ற தவிப்பு. வருடத்தின் துவக்கத்திலேயே ராகு 11லும், கேது 5ல் வருவது காரிய வெற்றி,முயற்சி செய்யும் காரியங்கள் கை கூடும்.புது முயற்சிகள் அனுகூலம்,ஆதாயத்தை தரும். வரவை காட்டிலும் செலவு அதிகமானலும் கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். குழந்தைகளின் உயர் படிப்புக்கு வங்கி உதவி கிடைக்கும். கருத்து வேற்றுமையால் பிரிந்த குடும்பங்கள் தம்பதியினர் ஓன்று சேருவர். திருமணம் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில் அபிவிருத்தி ஆகும். சிலர் தொழிலை மாற்றலாம் என்ற சிந்தனை இருக்கும். செய்யும் தொழிலையோ வேலையோ மாற்ற கூடாது. தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான். தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்ற நிலையாகி விடும். பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிப்பது நல்லது.ஆண்டு தொடக்கத்தை காட்டிலும் மத்திமத்தில் குரு பெயர்ச்சிக்குப் பின் நல்ல பலன்கள் நடக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சூரியன் இரண்டாம் பாவத்தில் சந்திரன் பத்தாம் பாவத்தில் செவ்வாய் பன்னிரெண்டாம் பாவத்தில் புதன் மூன்றாம் பாவத்தில் குரு பத்தாம் பாவத்தில் சுக்கிரன் ஜென்ம ராசியில் சனி ஜென்ம ராசியில் ராகு பதினொன்றாம் பாவத்தில் கேது ஐந்தாம் பாவத்தில் இருக்கின்றனர்.

சுக்கிரனும் ராசிநாதன் செவ்வாயும் பரிவர்த்தனை மேலும் சூரியனும் குருவும் பரிவர்த்தனை இவர்கள் தனாதிபதி, ஜீவனாதிபதி பரிவர்த்தனை என்பதால் இது நாள் வரை தடைப்பட்ட உத்தியோக விசயங்கள்,தொழில் முயற்சிகள்,வெளி நாட்டு பயணங்கள் வாய்ப்புகள் வரும். ஏழரை சனியால் வீண் விரயம், ,ஏமாற்றம்,சஞ்சலம் மருத்துவ செலவுகள் படிபடியாக குறையும்,கடன் சுமைகள் குறைந்து அசலை அடைத்து விடலாம். இழந்த செல்வத்தை மீட்டு விடலாம். சுபகாரியம் தாமதப்படலாம் ,வீடு வாசல் வண்டி வாகனம் கனவு பூர்த்தியாகும். இது வரை 5ல் கேதுவும் 11ல் ராகுவும் இருந்த நிலைமாறி இந்த ஆண்டு துவக்கத்திலேயே ராகு 10க்கும் கேது 4க்கும் பெயர்ச்சி ஆவதால் தொழில் அமைப்பு புது முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் ஜாதகத்தின் தசா புத்தி யோகமாக இருந்தால் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் வரும். ஜென்ம ராசியில் சனி இருப்பதால் குடும்பம் மனைவி மக்கள் விசயத்தில் நிதானமான போக்கை கையாள வேண்டும். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். ஒரு வார்த்தை வெல்லும் ஓரு வார்த்தை கொல்லும் எனவே பேச்சில் கவனம் தேவை. உங்கள் திறமையை 2016ம் ஆண்டு நீங்கள் யார் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள வைக்கும்.கூட்டு தொழில் நட்பு வட்டத்தில் கவனமாக இருக்கவும். தொழில் இடமாற்றம் தொழில் மாற்றம் உண்டு.மாற்றம் என்பது முன்னேற்றமே.

தனுசு:

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன் சந்திரன் ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் பதினொன்றாம் பாவத்தில் புதன் இரண்டாம் பாவத்தில் குரு ஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் பன்னிரெண்டாம் பாவத்தில் சனி பன்னிரெண்டாம் பாவத்தில் ராகு பத்தாம் பாவத்தில் கேது நான்காம் பாவத்தில் இருக்கின்றனர் இத்தகைய கிரக நிலையோடு ஆண்டு தொடங்குகிறது. பத்தாம் அதிபதியும் லக்னாதிபதியும் லக்கின கேந்திராதிபதியும் பரிவர்த்தனை பெறுவது என்பது யோகம் பரிவர்த்தனை யோகத்துடன் ஆண்டு தொடங்குவதால் அடிப்படை தேவைகள்,சுகமான வாழ்க்கை வாழ வழி உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் கை கூடும் நிம்மதியானபோக்கு தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் லாபம் பெருகும் உற்றார் உறவினர் ஆனுகூலம் ஆதாயம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் திருமணம் நடக்கும். 5 ம் அதிபதி செவ்வாய் 5 மிடத்தை பார்ப்பதால் இது வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். ஆண் வாரிசு இல்லை என்று ஏங்கியவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். வீடு மனை வாகனம் வாங்க கூடிய யோகமான ஆண்டு நவம திரிகோணத்தில் லக்கினாதிபதி குரு இருப்பதால் தொழில் வெளிநாட்டு பயணம் பொருளாதார வசதிகள் மேம்படும். புதியவர்களின் நட்பை பெற்று பொருளாதார வசதிகளை பெருக்கி கொள்ளலாம். ஏழரை சனியால் தடைப்பட்ட காரியங்கள் இனி தடையின்றி நடக்கும்.12ல் சனி இருப்பதால் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிருக்கும் பயணத்தில் கவனம் தேவை. தனம் வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பணம் விசயத்தில் யாருக்கும் ஜாமின் போட வேண்டாம். பணம் கொடுத்து வாங்குவதில் நிதானம் தேவை .தனுசு ராசிக்கு ஏற்றமான ஆண்டு என்பதால் தொட்டது தொலங்கும் பட்டது துளிர் விடும். ஏழரை சனி என்பதால் கால் மற்றும் கண்களில் ஏதாவது பிரச்சனை வரலாம் கவனமாக இருக்கவும்.

மகரம்:

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் சூரியன் பன்னிரெண்டாம் பாவத்தில் சந்திரன் எட்டாம் பாவத்தில் செவ்வாய் பத்தாம் பாவத்தில் புதன் உங்கள் ஜென்ம ராசியில் குரு எட்டாம் பாவத்தில் சுக்கிரன் பதினொன்றாம் பாவத்தில் சனி பதினொன்றாம் பாவத்தில் ராகு ஒன்பதாம் பாவத்தில் கேது மூன்றாம் பாவத்தில் இருக்கின்றனர் இத்தகைய கிரக நிலையோடு ஆண்டு தொடங்குகிறது.

ராசி நாதன் 11ல் இருந்து ராசியை பார்ப்பது நல்லது. குருவும் 8ல் இருந்து இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் 2016ம் ஆண்டு திருப்பத்தையும் திருப்புமுனையும் ஏற்படுத்தும் ஆண்டு. கடந்த ஆண்டு உங்களுக்கு ஏற்பட்டு சங்கடங்கள் மறையும்.தேவையில்லாத வைத்திய செலவுகள்,பணப்பிரச்சனைகள் தீரும். மாத தொடக்கத்தில் 2ல் கேது,8ல் ராகு வருவது மறைமுக போட்டி பொறாமைகள். மனக் குழப்பத்துடன் இருந்த வாழ்க்கை மகிழ்ச்சியையும், நிறைவையும் தரும். மனதளவில் உங்களை வாட்டிய சங்கடங்கள் மறையும். குடும்பத்தில் குழந்தைகளால் பெருமை கிடைக்கும். நல்ல வேலை எதிர்ப்பார்த்த உத்யோகமும் மாற்றமும் வரும். பொதுவாக பொது வாழ்க்கையில் நட்பு வட்டத்தில் தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் கடக ராசிக்கும்,மகர ராசிக்கும் வில்லங்கமே களத்திர வாழ்க்கை தான்.கணவன் நன்றாக இருந்தால் மனைவி வில்லியாக இருப்பார், மனைவி நல்லவிதமாக இருந்தால் கணவன் வில்லனாக இருப்பார் என்பதும் இந்த இரண்டு ராசிக்கும் களத்திர வாழ்க்கை பிரச்சனையை கொடுக்கும் என்பதும் 100ல் பத்து பேருக்கு தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்.90சதவிதம் நரக வாழ்க்கை தான் என்பதும் பொது கருத்து.

இந்த ஆண்டு 7க்குடைய சந்திரன் 8ல் இருப்பதால் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் இது வரை கசந்து போன உறவுகள் ஓன்று கூடி இனிக்கும்.பிரிவுகள் ஓன்று கூடும்.வேலை தொழில் நிமித்தமாக பிரிந்து இருந்த கணவன் மனைவி ஓரே இடத்தில் வாழ்வார்கள்.10ல் செவ்வாய் 4ம் வீட்டை பார்ப்பதால் வீடு,மனை,வாகனம் வாங்க கூடிய யோகமும் மாற்ற கூடிய வாய்ப்பு வரும். 8க்கு உடைய சூரியன் 12ல் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும்,திரவிய லாபமும் ஷேர் மார்க்கெட் பங்கு வர்த்தகம் லாட்டரி போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். புதன் ஜென்ம ராசியில் இருப்பதால் இது வரை படித்த படிப்புக்கு எற்ற உத்யோகம் கிடைக்காதவர்களுக்கு நல்ல உத்யோகம் கிட்டும்.அரசாங்க தொடர்ப்புடைய தொழில் அமைய வாய்ப்பு உண்டு.இது நாள் வரை தடைப்பட்ட திருமண வாய்ப்புகள் தடையின்றி நடக்கும்.

கும்பம்:

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களுக்கு 2016ம் ஆண்டு தொடக்கத்தில் பதினொன்றாமிடத்தில் சூரியன் சந்திரன் ஏழாம் பாவத்தில் செவ்வாய் ஒன்பதாம் பாவத்தில் புதன் பன்னிரெண்டாம் பாவத்தில் குரு ஏழாம் பாவத்தில் சுக்கிரன் பத்தாம் பாவத்தில் சனி பத்தாம் பாவத்தில் ராகு எட்டாம் பாவத்தில் கேது இரண்டாம் பாவத்தில் இருக்கின்றனர் இத்தகைய கிரக நிலையோடு ஆண்டு தொடங்குகிறது.

ஆண்டு தொடக்கத்தில் 2ல் கேது 8ல் ராகு 7ல்குரு சந்திரன் 11ல் சூரியன் இருந்து ஆண்டு தொடங்குகிறது. உங்களுக்கு இந்த ஆண்டு உங்கள் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும்.இது வரை இழுப்பறியாக கிடந்த காரியங்கள் தடை நீங்கி விறுவிறுப்பாக நடக்கும். பத்தாம் அதிபதி செவ்வாய் 9ம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றதால் தேவைகள் பூர்த்தியாகும். ராகு கேதுவினால் தடைபட்ட தொழில் வருமானம் திருப்தி தரும் வகையில் ஏற்றம் பெறும். புதிய வேலை வாய்ப்புகள் உண்டாகும், இடம் மாற்றம் வீடு மனை விஸ்தரிப்பு பொருளாதார அபிவிருத்தி உண்டாகும். பூர்விக சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகள் பாசம் கிடைக்கும். புத்திரபாக்கியமும் திருமண யோகமும் குடும்பத்தில் சுபகாரியம் விசேங்கள் நடக்கும். சகோதர ஓற்றுமை மேலோங்கும். கும்பம் ராசிக்கு12ம் அதிபதியும் சனியே என்பதால் உங்களை வைத்து காரியம் சாதிக்க தான் எல்லோரும் நினைப்பார்கள். உங்களுக்கு ஓன்று என்றால் யாரும் உதவ மாட்டார்கள். இது வரை இருந்த தேவையில்லாத குழப்பங்கள் நீங்கும். உடலை வருத்திய நோய்கள் விலகும்..

மீனம்:

மீனம்:

மீனம் ராசி நண்பர்களே 2016ம் ஆண்டு தொடக்கத்தில் உங்கள் சூரியன் பத்தாம் பாவத்தில் சந்திரன் ஆறாம் பாவத்தில் செவ்வாய் எட்டாம் பாவத்தில் புதன் பதினொன்றாம் பாவத்தில் குரு ஆறாம் பாவத்தில் சுக்கிரன் ஒன்பதாம் பாவத்தில் சனி ஒன்பதாம் பாவத்தில் ராகு ஏழாம் பாவத்தில் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கின்றனர் இத்தகைய கிரக நிலையோடு ஆண்டு தொடங்குகிறது.

குரு சந்திர யோகத்துடன் ஆண்டு தொடங்குவதால் அஷ்டமத்து சனி முடிந்தாலும் குரு 6ல் மறைந்ததால் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற தாமதமாகிறது எந்த காரியத்தை தொட்டாலும் தடைகள் தாமதங்கள் விரையங்கள் என்று தடுமாறிய உங்களுக்கு இந்த ஆண்டு சாதகமான ஆண்டு ஆகும். ராசி நாதன் ராசிக்கு இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் எடுத்த முயற்சி கை கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடை பெறும். தடைபட்ட திருமண வாய்ப்புகள் இனிதே நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும். லக்கினாதிபதியும் 6ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் தொழில் நிலை யோகத்தை கொடுக்கும். திருமணம் ஆகி பிரிந்து இருந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள்.சிலருக்கு மறுமணம் நடக்க கூடிய வாய்ப்பு வரும். தற்போது உள்ள வேலையை விட்டு புது வேலை தேடிக்கொள்ளலாம் என்று ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும்,உத்யோக உயர்வு கிடைக்கும். சிலரின் வாழ்க்கை துணைகு அரசு தொடர்புடைய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளின் மேல் படிப்பு நினைத்தது போல் சிறப்பாக இருக்கும். இது வரை வரவுக்கு மீறி செலவாக இருந்த காலம் மாறி சேமிப்பு உயரும். ஆண்டின் துவக்கத்தில் ராகு 6ம் இடத்திற்கும்

கேது 12ம் இடத்திற்கும் மாறுவதால் கடந்த ஆண்டின் வைத்திய செலவுகள் மறையும். உற்றார் உறவினர் பகை மறையும். கூட்டு தொழில் ஆதாயத்தை தரும். இந்த ஆண்டு மகிழ்ச்சியையும்,நிறைவையும் தரும்.

English summary
Here is the 2016 New Year Horoscope (Rasi Palan) based on your moon sign. You will come to know about your health, love, relationship, education, career.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X