Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி: துலா மாதம் பிறப்பு... ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரி நீரால் திருமஞ்சனம்

துலா மாதம் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீா் கொண்டுவரப்பட்டது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: துலா மாதம் பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீா் கொண்டுவரப்பட்டது.பின்னர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படும்.

தங்கக் குடத்தில் புனிதநீர்

தங்கக் குடத்தில் புனிதநீர்

துலா மாதபிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நம்பெருமாள் தரிசனம்

நம்பெருமாள் தரிசனம்

துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும்.

மேலும், மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆண்டாளின் சேவை

ஆண்டாளின் சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கோவில் யானை ஆண்டாள் கடந்த 1986ஆம் ஆண்டு அக்டோபர் 16-ல் சேவை செய்ய வந்தது. ஆண்டாள் தனது முதல் சேவையாக துலா மாதம் காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து வந்தது. அன்று முதல் நேற்று வரை துலா மாத பிறப்பு வரை காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனிதநீரை ஆண்டாள் யானை 35வது ஆண்டாக கொண்டு வந்து தனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

தாயார் திருவடி தரிசனம்

தாயார் திருவடி தரிசனம்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக செயல்படுகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், மங்களாசாசனம் செய்து பாடிய திருத்தலமாகும். ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன. இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

பெருமாளுக்கு தைலக்காப்பு

பெருமாளுக்கு தைலக்காப்பு

ஸ்ரீரங்கநாதரின் பாத தரிசனமும் தாயாரின் திருவடி சேவையும் கண்டால் வைகுண்டத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவேதான் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளில் தாயாரின் திருவடி சேவை காண பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலவர் ரங்கநாதர் திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இதனால், மூலவர் ரங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர்.

பெருமாளுக்கு திரை

பெருமாளுக்கு திரை

இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர். தைலக்காப்பிடும் நாட்களில் பெருமாளை அலங்கரித்திருக்கும் வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு திருவடி தொடங்கி திருமுடிவரை தைலம் பூசப்படும். ஒரு முறை தைலம் பூசினால் அது உலர்வதற்கு சுமார் 1 மண்டல காலம் வரை ஆகும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும்.

இரண்டு தைலக்காப்பு

இரண்டு தைலக்காப்பு

தைலம் பூசுவதற்காக பெருமாளின் மீதிருக்கும் வஸ்திரம் மற்றும் நகைகள் அகற்றப்பட்டுவிடுவதால் பெருமாளின் மார்புக்குக் கீழே திருவடி வரையுள்ள உள்ள பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும்

இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு கடந்த ஆகஸ்டு மாதம் 27ஆம் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன.

மூலவர் திருவடி தரிசனம்

மூலவர் திருவடி தரிசனம்

பொதுவாக புரட்டாசி மாதங்களில் தைலகாப்பு நடைபெறுவதால் பெருமாளின் திருவடியை பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், இந்தாண்டு கடந்த 8ஆம் தேதியுடன் தைலகாப்பு நிறைவடைந்ததையொட்டி புரட்டாசி கடைசி சனிக்கிழமை முதல் பக்தர்கள் மூலவர் ரங்கநாதர் திருவடியை தரிசனம் செய்தனர். அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வரை ரங்கநாதரை முழு அலங்காரத்துடன் திருவடியை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+