• search

சொர்க்கத்திற்கு போகணுமா? ஆனி ஏகாதசியில் ஸ்ரீதன்வந்திரி பகவானை வழிபடுங்கள்

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: ஆனி 9 ஆம் தேதி 23.06.2018 வரும் ஏகாதசி "அபரா', "நிர்ஜலா' ஏகாதசியாகும். இந்த ஏகாதசியில் இறைவனை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும். காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

  அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்ற ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

  Aani Ekadasi Amla Powder Abhishekam on Sri Danvantri Arogya Peedam

  வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

  ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வருகிற ஆனி 9 ஆம் தேதி 23.06.2018 வரும் ஏகாதசி "அபரா', "நிர்ஜலா' ஏகாதசியாகும். இந்த ஏகாதசியில் இறைவனை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் மேலும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கி சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

  இத்தகைய சிறப்புகள் பொருந்திய ஏகாதசி திதியில், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், நிம்மதியான தூக்கம் வேண்டியும், துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும்,வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 23.06.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற உள்ளது.

  இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அழைக்கின்றனர். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  Sri dhanvantri temple walajapet amla powder abishegam for cure disease on June 23rd, 2018.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more