பஞ்சசபைகளில் நடராஜர் தாண்டவம் - மதுரையில் கால் மாற்றி ஆடிய காரணம் தெரியுமா?
நடராஜரின் ஐந்து நடனசபைகளில் வெள்ளியம்பலமான மதுரையில் மட்டும் ஏன் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனமாடுகிறார் என்பது ஒரு சுவராஸ்யமான கதை உள்ளது.
சிதம்பரம்: நடராஜர் ஆடும் திருநடனத்தை காண கண் கோடி வேண்டும். நடராஜப் பெருமான் நடனம் ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகத்தின் இயக்கம் இயற்கையை ஒட்டி இயல்பாக இருக்கிறது. ஆடல்வல்லன் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும் இந்த நேரத்தில் சிவபெருமானின் பஞ்சசபைகள் பற்றியும் வெள்ளியம்பலமான மதுரையில் வலதுகாலை தூக்கி நடனமாடும் நடராஜரைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
பொன்னம்பலம், வெள்ளியம்பலம், தாமிரசபை, சித்திரசபை,ரத்தினசபை என நடராஜர் பஞ்சபைகளில் திருநடனம் ஆடுகிறார். நான்கு சபைகளிலும் இடதுகாலை தூக்கி நடனம் ஆடும் சிவன், மதுரையில் வெள்ளியம்பலத்தில் மட்டும் சிவன் வலதுகாலை தூக்கி நடனமாடுகிறார்.
சிதம்பரத்தில் பொன்னம்பல சபையில் இவர் ஆனந்தத்தாண்டவம் ஆடி பக்தர்களை மகிழ்விக்கிறார். திருநெல்வேலியில் தாமிரசபையில் ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபையில் நடராஜர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் ரத்தினசபையில் ஆடுவது காளிதாண்டவம். மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெள்ளியம்பலத்தில் அவர் ஆடுவது சந்தியா தாண்டவம்.
மதுரையில் மட்டும் ஏன் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனமாடுகிறார் என்பது ஒரு சுவராஸ்யமான கதை.
மதுரையில் மீனாட்சி, சுந்தரேசுவரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.
வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர். தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர்.

பரதம் கற்ற மன்னன்
மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டிய மன்னன் சிவபக்தன் அவன் ஆயகலைகளில், 63 கலைகளைக் கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு ஓர் உண்மை உரைத்தது.

காலை மாற்றி ஆடு
பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்? என நினைத்தவன் நேராக நடராஜர் சன்னதிக்குச் சென்றான். நடராஜரைப் பார்த்து பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!" என வேண்டினான். இறைவன், மன்னனை மேலும் சோதிக்கும் விதமாக சலனமின்றி நின்றிருந்தான். அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால், என் முன்னால் ஒரு கத்தியை நட்டுவைத்து அதன்மீது விழுந்து உயிர் துறப்பேன்,' என்று மிரட்டலாய் மன்றாடினான் மன்னன்.

பக்தனின் கோரிக்கையை ஏற்ற இறைவன்
சற்றே கண்மூடி மீண்டும் திறந்தபோது அப்படியே மெய்சிலிர்த்துப் போனான். ஆமாம், பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருந்தார் நடராஜப்பெருமான்! எனக்காகக் கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும், என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், தனது இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி நடனம் ஆடினார்.

வெள்ளியம்பல நடராஜர்
இன்றைக்கும் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. நடராஜரின் கால் மாறி ஆடிய இந்த சந்தியா தாண்டவம் பற்றி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் குறிப்பு காணப்படுகிறது. ஆருத்ரா தரிசன நாளில் சிவனின் பஞ்சபைகளில் ஏதாவது ஒரு சபைக்கு சென்று நடராஜனின் நடனத்தை கண்டு தரிசனம் செய்யுங்கள். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கி ஆனந்தமாக மாறும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications