For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடான உணவு, ஜில் உணவு, காரமான உணவு - எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி சாப்பிட பிடிக்கும்

உணவே மருந்தாக இருந்த காலம் போய் மருந்தே உணவாகி வருகிறது. மனிதர்களாக பிறந்த அனைவரும் உயிர்வாழ்வதற்காக சாப்பிடுகிறோம். ராசிக்கேற்ற உணவுகளை சாப்பிட்டால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: அறுசுவை உணவுகளை அளவோடு உண்டால் நோய்களில் இருந்து தப்பலாம். சிலருக்கு காரமான உணவு சாப்பிட பிடிக்கும், சிலருக்கு இனிப்பான உணவு பிடிக்கும். சிலருக்கு சூடாக சாப்பிட பிடிக்கும், சிலருக்கு ஜில்லென்று ஆறிய உணவு பிடிக்கும். 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுவார்கள் என பார்க்கலாம்.

உணவே மருந்து என்ற காலம் மாறி இன்றைக்கு மருந்தே உணவு என்றாகி வருகிறது. ராசிக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் பாதிக்காது. உணவும், சுவையும் ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ப மாறும். நீர், நிலம் காற்று, நெருப்பு தன்மை உடைய ராசிக்காரர்களுக்கு தனித்தனியான சுவை உடைய உணவுகள் பிடிக்கும்.

லக்னாதிபதி, ராசிநாதன் ஆகியோரைப் பொறுத்து உணவின் சுவையும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மேஷம் முதல் மீனம் வரை சாப்பாட்டு விசயத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்படி என்று பார்க்கலாம்.


அதிக காரம் பிடிக்கும்

அதிக காரம் பிடிக்கும்

மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் காரம் நிறைந்த உணவுகளை விரும்புவர். 12 ராசிகளில், மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் அசை போடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இரைப்பை வலுவானதாக இருக்கும். செரிமானத்துக்கு உதவும் நீர் சுரப்பிகளும் அதிகமாகச் சுரப்பதால் இவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் விருப்பமாக இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் நிலத்தின் அம்சமாக உள்ளவர்கள். ஹெவியான உணவுகளை தவிர்த்து விடலாம்.

நோயிலிருந்து தப்பலாம்

நோயிலிருந்து தப்பலாம்

பொதுவாகவே மேஷ ராசிக்காரர்கள் நெருப்பு அம்சம் கொண்டவர்கள். இவர்கள் காரமான உணவை சாப்பிடக்கூடாது. ஸ்பைசியான உணவை சாப்பிட்டால் நெருப்பு கட்டிகள் உடலில் வரும். அதிக சூடாகவும் சாப்பிடக்கூடாது. கொஞ்சம் ஆறிய அல்லது வெது வெதுப்பான உணவுகளை சாப்பிட்டால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். வாழைப்பழம், ப்ரௌவுன் ரைஸ், வெள்ளரி, ஆப்ரிகாட் ஆகியவைகளை அடிக்கடி சாப்பிடலாம்.

உணவுக்கு இடைவெளி

உணவுக்கு இடைவெளி

புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுபவர்களாக இருப்பர். சரியான இடைவெளிக்குப் பின்னரே அடுத்த வேளை சாப்பாட்டை எடுத்துக் கொள்வர். வயிற்றுக்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவர். மூளை, நரம்புகளுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட தரலாம். அதே நேரத்தில் மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் சாப்பாட்டு ராமன்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்ற உணவு பழங்கள் திராட்சை, ஆப்பிள் காலி ப்ளவர்.

சூடான சத்தான உணவுகள்

சூடான சத்தான உணவுகள்

கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகச் சூட்டுடன் சாப்பிடுவர்.மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் மிதமான சூட்டில் உணவு உட்கொள்வர். தயிர், முட்டை அதிகம் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்த ராசிக்கரர்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெள்ளரி, பூசனி, தர்ப்பூசனி, தக்காளிகளை தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்


சிம்ம ராசிக்காரர்கள், காய்கறிகள், பழங்களை சரிவிகிதமாக சாப்பிடலாம். துலாம் ராசிக்காரர்கள் சூடாகச் சாப்பிடுவார்கள். பயிறு வகைகளை துலாம் ராசிக்காரர்கள் சாப்பிடலாம், ஹெவியான உணவுகள், சாக்லெட்களை தவிர்ப்பது நன்மை தரும். மீனம், தனுசு ராசிக்காரர்கள் முற்றிலும் சூடு இல்லாத ஜில்லென்ற நிலையில் உள்ள உணவுகளை சாப்பிட விரும்புவார்கள்,

சாப்பாட்டு ராமன்கள்

சாப்பாட்டு ராமன்கள்

மேஷம், ரிஷப ராசிக்காரர்கள் ஆவியில் வேக வைக்கும் உணவு வகைகளில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் மகரம், கும்ப ராசிக்காரர்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை விரும்புவர். இந்த ராசிக்காரர்கள் சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள். ருசியாக சாப்பிடுவதை விரும்புவர்

வேகவைத்த காய்கறிகள்

வேகவைத்த காய்கறிகள்

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் தயிர், மோர் மற்றும் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவர். இந்த ராசிக்காரர்கள் மதுபானங்களை குடிக்கக் கூடாது. காம உணர்வுகளை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மாறாக பழங்கள், தேங்காய், வேகவைத்த உணவுகள், பாதம் ஆகியவைகளை சாப்பிடலாம்.

English summary
Some like it hot, others need a bit more substance, and some eat purely based on emotion or so say the heavenly stars.Understanding your strengths and weaknesses through Astrology can help you choose healthy eating strategies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X