For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செருப்பால் யாரையும் அடிக்காதீங்க... அப்புறம் வாழ்க்கையில ஜெயிக்கவே முடியாது

செருப்பு மேட்டர்தான் இப்போது ஹாட் டாபிக். எம்எல்ஏவின் செருப்பை எடுத்துச்சென்ற தலித் நிர்வாகி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: ராமரின் பாதுகைதான் 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் ஆட்சி செய்திருக்கிறது. நமது பாதத்தை கல்லிலும் முள்ளிலும் இருந்து பாதுகாக்கும் செருப்பினை நாம் பாதுகாப்பாக வைத்திருந்தால் நம்முடைய செல்வம் பெருகுமாம். மாறாக நாம் யாரையாவது செருப்பால் அடித்தாலோ செருப்பால் அடிப்பேன் என்று சொன்னாலோ, நம்முடைய செருப்பை அடுத்தவர்களை தூக்க வைத்தாலோ நம்முடைய செல்வம் செல்வாக்கு எல்லாம் செருப்பால் அடிபட்டவர்களுக்கும், நம்முடைய செருப்பை தூக்கிக்கொண்டு நடந்தவர்களுக்கும் போய் விடுமாம்.

செருப்பு மேட்டர்தான் இப்போது ஹாட் டாபிக். எம்எல்ஏவின் செருப்பை எடுத்துச்சென்ற தலித் நிர்வாகி இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். எம்எல்ஏ மீதோ, தலைவர் மீதோ யாராவது செருப்பை வீசினால் அவரைப் பற்றி செய்திகள் வைரலாகும். நம்முடைய செய்தியும் செருப்பு பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்திதான்.

இந்துக்களுக்கு பாதுகை புனிதமானது. எனவேதான் பல கோவில்களிலும் நினைவு இல்லங்களிலும் பாதுகைகளை வணங்குகின்றனர். அந்த பாதுகை கட்டைகளில் செய்யப்பட்டிருக்கும். இன்றைக்கும் பல பணக்காரர்களின் வீட்டில் விலை உயர்ந்த செருப்பை வரதட்சணையாக வாங்கும் வழக்கம் உண்டு. சிலர் வீட்டில் மகாலட்சுமியின் பாதுகைகளை வரைந்து வைத்திருப்பார்கள். பகவான் கிருஷ்ணரின் பாதுகையை வீட்டில் வரைந்து வைத்திருப்பார்கள்.

செருப்பு முக்கியத்துவம்

செருப்பு முக்கியத்துவம்

கோவிலுக்கு போனாலோ, கல்யாண வீட்டிற்குப் போனாலோ நினைப்பு எல்லாம் நம்முடைய செருப்பு மீதுதான் இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கின செருப்பு யாரும் தூக்கிட்டு போயிடக்கூடாதே என்றுதான் நினைப்பு வரும். நம்முடைய செருப்பு தொலைந்து போனால் நம்முடைய தோஷங்களும் தொலைந்து போய் விட்டதாக கூறுவார்கள். அதே நேரத்தில் நம்முடைய செருப்பு தொலைந்தாலோ நம்முடைய செல்வமும் செல்வாக்கும் தொலைந்து போகுமாம்.

மகாவிஷ்ணு அம்சம்

மகாவிஷ்ணு அம்சம்

நம்முடைய பாதங்களில் மகாலட்சுமி, மகாவிஷ்ணும் வாசம் செய்வதாக ஐதீகம். நாம் போட்டிருக்கும் செருப்பானது, நம்முடைய பாதங்களுக்கு மட்டும் பாதுகாப்பு அல்ல. நம் பாதங்களில் வசிக்கும் விஷ்ணு பகவானுக்கும், மகாலட்சுமிக்கும் பாதுகாப்பை கொடுக்கிறதாம். எனவேதான். எனவேதான் நம்முடைய செருப்பை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

செருப்பு அதிர்ஷ்டம் யாருக்கு

செருப்பு அதிர்ஷ்டம் யாருக்கு

இரண்டு செருப்பையும் ஜோடியாக கழற்றி விட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். நம்முடைய செருப்பை நாம் பத்திரமாக வைத்துக்கொண்டால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். யாரையாவது நாம் செருப்பால் அடித்தால் நம்முடைய அதிர்ஷ்டம் நம்மிடம் செருப்பால் அடி வாங்கியவருக்கு சென்றுவிடுமாம். செருப்பால் அடி வாங்கியவர் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார். செருப்பால் அடித்தவர் தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவாராம்.

எட்டி உதைக்காதீங்க

எட்டி உதைக்காதீங்க

நாம் யாரையும் காலால் மிதிக்கக் கூடாது யாரையும் எட்டி உதைக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நம்முடைய பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் நம்மிடம் மிதி வாங்கியவர்களிடம் சென்று விடுவார்களாம். அதே போல நம்முடைய செருப்பை யாரையும் தொட விடுவதுகூட தவறுதான். செருப்பு சாதாராண மேட்டர் இல்லை என்று இப்போது புரிந்திருக்குமே.

English summary
Footwear are generally worn by mendicants and saints of Hinduism. Its significance in Hinduism is linked to the epic Ramayana. If we keep our footwear safe from the thorns and thorns, our wealth will increase. On the contrary, if we say to someone to be beaten or to be beaten, or to sleep next to our sandals, all our wealth and influence will go to those who have been shod with sandals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X