குரு பெயர்ச்சி பலன் 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகும் குருவின் பார்வை
மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். இதனால் 6 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.
சென்னை: மீன ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் 21ஆம் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை சிம்மராசி, துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் பயணத்தால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் அற்புதமான பலனை அனுபவிக்கப் போகின்றனர். அதே நேரத்தில் இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு வருமா என்று அஞ்ச வேண்டாம் சின்னச் சின்ன சங்கடங்கள் மட்டுமே வந்து செல்லும். குரு பகவான் பெரிய அளவில் சோதனைகளை தர மாட்டார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராஜயோக காலம் வந்து விட்டது. ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. இதுநாள் வரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை உடுத்தி குரு பகவானை வணங்குங்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் குரு ருண ரோக சத்ரு ஸ்தான குருவாக பயணம் செய்கிறார். நோய் ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் எதிரிகள் பிரச்சினைகள் நீங்கும். உடலில் இருந்த நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. குரு பார்வை உங்கள் ராசிக்கு 2,12,10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. திடீர் பணவரவு வரும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வியாழ ஹோரையில் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய குருவாக சஞ்சாரம் செய்கிறார். ஏழரை சனி முடிந்து விட்டது. குருபகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீதும் குருவின் பார்வை விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வியாழக்கிழமைகளில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்கள் கடந்த பல ஆண்டுகாலமாகவே சங்கடங்கள் அனுபவித்து வருகிறீர்கள். ஜென்ம சனி முடிந்தது என்று பெருமூச்சு விட்ட நிலையில் பாத சனியாக பயணம் செய்யப்போகிறார். இப்போது குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் சுகங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். சிலர் இந்த கால கட்டத்தில் வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே..குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. குரு பலன் வந்து விட்டதால் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப காரியம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே..உங்கள் ராசிநாதன் குரு பகவான் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். ஏப்ரல் மாதம் முதல் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. ஏழரை சனி தொடங்கி உள்ளது. ஜென்ம குருவால் அவதிப்பட்டு வந்த உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றிகள் வந்து உங்களை சேரப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் வீடுகளின் மீது விழுவதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் மேலும் நன்மைகள் கிடைக்க வியாழக்கிழமை குரு பகவானை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications