• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிதோஷம் போக்கும் கால பைரவாஷ்டமி வழிபாடு - பைரவ ஜெயந்தி நாளில் 64 பைரவ யாகம்

|

சென்னை: பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டு சனி, ஜென்மச்சனி, அர்த்தஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் எல்லா சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இத்தனை சிறப்புமிக்க பைரவருக்கு, வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 19.11.19ஆம் தேதியன்று, பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 64 பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவருக்கு 64 திரவிய அபிஷேம், 64 யாக குண்டங்கள், 64 பைரவர் யாகம், 64 யோகினி பூஜை, 64 நெய் தீபங்கள், 64 திரவிய அபிஷேகங்கள், 64 நபர்கள், 64 பழங்கள், 64 நிவேதனங்கள், 64 புஷ்பங்கள், 64 கூஷ்மாண்ட தீபம். 64 மூலிகைகள் கொண்டு விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது.

ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

Kalabairavastami 2019: 64 Bairavar Yagam and Special Pooja

அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வதும், சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். மற்றும் இந்நாளில் சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.

பிரம்மதேவரின் கர்வத்தை அடக்கியவர் காலபைரவர்

சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர், தன்னைச் சரணடைந்த பக்தர்களை சகல ஆபத்துகளில் இருந்தும் பாதுகாத்து, அவர்களுக்கு அனைத்து நலன்களையும் அருளக்கூடியவர். படைப்புத் தொழில் புரிவதால் தானே மும்மூர்த்தியரிலும் உயர்ந்தவர் என்று பிரம்மதேவர் கர்வம் கொண்டபோது, பிரம்மதேவரின் கர்வத்தை அடக்க, சிவபெருமானின் அம்சமாகத் தோன்றியவரே கால பைரவர்.

பரமேஸ்வரன் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீ மஹா பைரவர் மூர்த்தியை உற்பத்தி செய்து அவரிடம் உலகினை காக்கும் பொறுப்பினை அளித்து, அசுரர்கள் தொல்லை அதிகரிக்கும்பொழுது சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வென்றதாக புராணங்கள் மூலம் அறிய முடிகிறது.

Kalabairavastami 2019: 64 Bairavar Yagam and Special Pooja

சகல உலகங்களையும் அதில் அமைந்துள்ள, ஆலயங்களையும், தீர்த்தங்களையும் காவல் புரிபவர் ஸ்ரீ பைரவர் ஆவார். ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் அவர் ஷேத்ர பாலகர், கடல் முதலான பெரிய நீர்ப்பகுதிகள் பொங்கி பூமியை அழித்து விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால், தீர்த்த பாலகர் என்றும் மக்களிடம் அறிவுச் சுடரை வளர்ப்பதால் ஞான பைரவர் என்றும், யோகங்களை அள்ளித்தருவதால் யோகபைரவர் என்றும், யோகிகளுக்கு காவலாக இருப்பதோடு மகா வீரர்களிடம் உக்ர பைரவராகவும், பஞ்ச பூதங்களினால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் பல்வேறு வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

பைரவரின் பல்வேறு சிறப்புகள்

பைரவர் உக்கிரமான தேவராக விளங்கினாலும் பெருங்கருணை மிக்கராவார். சிவாலயங்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாக உள்ளது. வேத, இதிகாச, சைவ, சாக்த, கவுமார, சவுர மார்க்கங்களிலும் ஜைனம், பவுத்தம் முதலான பிற மார்க்கங்களிலும் பைரவரை சிறப்புடன் போற்றுகின்றனர்.

பைரவர் மந்திர யந்திர தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர். கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

64 பைரவர் யாகம் மற்றும் பூஜையின் பலன்கள்

12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் அவருள் அடக்கம் என்பதால், இவரை வணங்கினால் உயர்வான வாழ்வினைப் பெறலாம். பைரவரை வணங்கிய எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவதே இல்லை என்பது ஐதீகம். காலத்தின் கடவுளான கால பைரவர், நம் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். எனவே துன்பப்படும் எல்லா மக்களும் எல்லா வளங்களும் பெறலாம்.

தீராத பிணிகளும் தீரும். கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம். இவர் சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டு சனி, ஜென்மச்சனி, அர்த்தஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் எல்லா சகல சம்பத்துகளையும் பெறலாம்.

Kalabairavastami 2019: 64 Bairavar Yagam and Special Pooja

இத்தனை சிறப்புமிக்க பைரவருக்கு, பிரதி வருடம் கார்த்திகை மாதம் பைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு 64 குண்டங்களில் 64 நபர்கள் அமர்ந்து 64 பைரவர் ஹோமம், மஹாபீடம் என்று அழைக்கப்படும் இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 17.11.2019 வெள்ளிக்கிழமை மாலை முதல் 19.11.2019 ஞாயிற்று கிழமை மாலை வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவர், ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் 64 பைரவர்களுக்கு 64 தீபங்கள் ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64 நபர்களால் 64 யோகினி பூஜையுடன் 64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

இவ்வைபவத்தில், தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று திருவருளை பெறுமாறு 64 பைரவர் சகித 64 யோகினிகளை ப்ராத்திக்கின்றோம்.

Kalabairavastami 2019: 64 Bairavar Yagam and Special Pooja

மேற்கண்ட மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் பங்கேற்கலாம்.

தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Worshiping the Bairavar can be avoided by the Elarai Sani, Genma Sani, Ardhastama Sani and Ashtama Sani. Yagnasree Gnanaguru Dr.Muralidhara Swamigal says that there is no doubt that worshiping Bairavar can get all the benefits.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more