Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கந்த சஷ்டி விரதம் ஆறு மிளகு ஆறு கை நீர் போதும் - விரத நாட்களில் மறந்தும் தவறு செய்யாதீர்கள்

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும்.

உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

Kanda Sashti fasting dos and dont fasting days

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.

காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரம் குளிக்க வேண்டும். தினமும் காலை மாலை வீட்டில் இருக்கும் முருகன் படத்திற்கு பூ வைத்து தீபம் ஏற்றி கற்பூரம் காட்ட வேண்டும். காலை அல்லது மாலை கந்த சஷ்டி கவசம் படிக்கச் வேண்டும். மாலை வீட்டில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
முடிந்த வரை தினம் ஒருவருக்கு எச்சில் படாமல் செய்த உணவை தானம் செய்ய வேண்டும்.

ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது அவசியம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது. மது புகை கூடாது. தம்பதியர் உறவு கொள்ளக்கூடாது. கோபமாக பேசக்கூடாது. இரவு தரையில் கம்பளம் விரித்து தூங்கவேண்டும் கட்டில் மெத்தை கூடாது. முடிந்த வரை காலனி தவிர்ப்பது நலம். யாரையும் திட்டக் கூடாது. எந்த கரணம் கொண்டும் கோபமாக கெட்ட வார்த்தை பேச கூடாது

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்குவிபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனம் உருக வேண்ட வேண்டும்.

சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து முடிந்தால் மாவிளக்கு போடுங்கள் பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேதியத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கைகூடி வரும்.

நல்ல வேலை கிடைக்கவும், கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். திருமணம் கை கூடி வரும். எதிரிகள் தொல்லை ஒழியும். சஷ்டி விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+