கேரளாவில் குருவாயூர் கிருஷ்ணன், திருவனந்தபுரம் பத்மநாபசாமியை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி
கேரளாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், குருவாயூர் கோவில்களிலும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் வழிபாடு செய்ய அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் கோவில்கள் சாமி தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளன. இதே போல கேரளாவிலும் பக்தர்கள் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலை 3.15 முதல் 4.15 மணி வரையிலும், 5.15 முதல் 6.15 மணி வரையிலும், காலை 8.30 முதல் 10 மணி வரையிலும், 10.30 முதல் 11.15 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.15 மணி வரையிலும், 6.50 முதல் 7.20 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரே நேரத்தில் 15 பக்தர்கள் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குருவாயூர் கோவிலும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு உத்தரவுபடி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 300 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் பக்தர்கள் நாலம்பலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல் திருமணம் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரு திருமணத்தில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
திருமண நிகழ்ச்சிகளில் வீடியோ, புகைப்படம் எடுக்க 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒரு நாளைக்கு எத்தனை திருமணங்கள் வரை நடத்தலாம் என்பது குறித்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவிகிதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்க அனுமதி இல்லை என்று கேரளா மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications