காதல் வந்தால் சொல்லியனுப்பு.. இந்த வாரத்துக்கான "லவ் சிச்சுவேஷன்" செமை பாஸ்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல்.. மூர்க்கர்களையும் ஈர்க்கும் வாசகம்.. இந்த ஒரு சொல்லுக்காக எத்தனை செல்களில் இன்று காதல் வசனம் பாடிக் கொண்டிருக்கிறார்கள் நமது இளைஞர்களும், இளைஞிகளும்.

ஆனால் பாருங்க.. நேரம் என்று ஒன்று உண்டு. நமது ராசிக்கு எல்லா சாதக சூழலும் இருக்கும்பட்சத்தில் இந்த காதல் சிச்சுவேஷனும் செமையாக ஒர்க் அவுட் ஆகும்.

அது அதற்கு கால நேரம் உண்டு என்று சொல்வார்கள் இல்லையா.. அது போலத்தான். அதில் உண்மையும் உள்ளது. கிரகங்கள் சாதகமாக இருக்கும்போது எல்லாமும் கை கூடி வரும்., நினைத்தது நடக்கும், விரும்பியது கிடைக்கும்.. ஊடல் போய் கூடலில் சுகம் கூடும். ஒவ்வொரு ராசிக்கும் இந்த வாரத்தில் அதாவது டிசம்பர் 25ம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் காதல் சூழல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.

சூரியன் சனி சுக்கிரன்

சூரியன் சனி சுக்கிரன்

மூலம் நட்சத்திரம் தனுசு ராசியிலேயே மிகவும் சென்ஸிடிவ்வானது. இந்த வாரம் தனுசு ராசியில் 3 கிரகங்கள் அமர்ந்துள்ளன. சூரியன், சனி, காதல் கிரகமான சுக்கிரன் இந்த வாரம் தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளனர். எனவே இந்த வாரம் யாருக்கு காதல் ஒர்க் அவுட் ஆகும், குடும்பத்தில் யாருக்கு ஊடல், யாருக்கு கூடல் என்பதை அறியலாம்.

மேஷம்

மேஷம்

7வது வீட்டில் செவ்வாய் வாசம் புரிகிறார். குருவும் ஏழில் அமர்ந்துள்ளார். சூரியன் 9வது வீட்டில் சுக்கிரன் கூடவே சனியும் வாசம். உங்களது காதல் வாழ்க்கை இந்த வாரம் புத்துயிர் பெறும். உறவுகள் வலுப்படும். தற்போதைய உறவில் புதிய வசந்தம் வீசும். உங்களது துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். டாப் கியரில் உங்களது காதல் வாழ்க்கை இருக்கும். புதிய முடிவுகளை எடுக்க உகந்த வாரம். எல்லா சூழலையும் சாதாரணமாக கையாளுங்கள். புத்திசாலித்தனத்தைக் காட்ட முயற்சிக்காதீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

உங்களது துணைக்கு உங்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். வழக்கத்தை விட அதிகமாக வசீகரிப்பீர்கள். காதல் பெருகும். கடினமான சூழல் வந்து மறையும். உங்களது துணையை அடிக்கடி வெளியில் கூட்டிச் செல்லுங்கள். உறவுகளை வலுப்படுத்துங்கள். இந்த வாரம் சூப்பராக அமையும்.

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் உங்களது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதற்கு உங்களது துணை பெரும் உதவியாக இருப்பார். உங்களுக்கு உயர்வு தரும் அறிமுகங்களை உங்களுக்கு அவர் செய்து வைப்பார். உங்களது உயர்வுக்கு துணையாக இருப்பார். உங்களைச் சுற்றி நிறைய மாற்றங்களைப் பார்ப்பீர்கள். உங்களிடமிருந்து உங்களது துணை அதிக அன்பை எதிர்பார்க்கிறார். அது கிடைத்தால் உங்களிடம் மேலும் ஒட்டுதலாக இருப்பார். உயிராக இருப்பார். இருவரும் இணைந்து அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்ப்பார். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன என்று பாடுவார்.

கடகம்

கடகம்

இது உங்களுக்கு வாவ் வாரம். இருவரும் இணை பிரியாமல் இருப்பீர்கள். நெருக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அதிகம் புரிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை "பெஸ்ட்" நாள்.. விட்ராதீங்க! அவர் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு செயலை இந்த வாரம் சர்பிரைஸாக செய்து முடித்து அசத்துவீர்கள். காதலுக்கான வாரம் இது.

சிம்மம்

சிம்மம்

உங்களது காதல் வாழ்க்கையில் சிறு சிறு சலசலப்புகள் நேரிடலாம். அதற்கான காரணத்தை ஆராய்ந்து பாருங்கள். எங்கு பிரச்சினை என்பதை அறிந்து சரி செய்யபப் பாருங்கள். மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும் உங்களது புத்திசாலித்தனத்தால் அதை சமாளிப்பீர்கள்.

கன்னி

கன்னி

உங்களது துணையால் சிக்கல் வருநம். உங்களது துணையுடன் பிணக்கு ஏற்படலாம்., தேவையில்லாத சலசலப்புகள் ஏற்படலாம். உங்களது துணையுடன் உங்களுக்கு உள்ள நெருக்கம் சிலரின் கண்களை உறுத்தி அதனால் பிரச்சினை வரலாம். எனவே நீங்கள் இருவருமே கவனமாக இருப்பது நல்லது. அதேசமயம், உங்களது உறவு வலுப்படும். மகிழ்ச்சியுடன் எதையும் அனுபவிப்பீர்கள். வெள்ளிக்கிழமை உங்களுக்கு நல்ல நாள். உங்களுக்குள் காதல் மனது மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஜமாயுங்கள்.

துலாம்

துலாம்

உங்களுக்குள் காதல் உணர்வுகள் அதிகம் தூண்டப்படும். புதிய உறவுகளுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களது காதலில் சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். ஏற்கனவே உள்ள உறவு வலுப்படும். நெருக்கம் அதிகரிக்கும். நம்பிக்கை உணர்வை அதிகரியுங்கள். அது முக்கியம். அலுவலகத்தில் காதல் பூக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஸோ.. நீண்ட நாளாக மனதில் வரித்துக் கொண்டிருப்பவரிடம் நெருங்கிச் சென்று நெஞ்சில் உள்ளதை சொல்லி மகிழுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

காதல் உணர்வில் ஒரு சிறிய வெறுமை இந்த வாரம் வரும். உங்களுக்கு சாதகமான சூழல் சற்று மந்தமாக உள்ளது. சில தடைகளை சந்திக்க நேரிடலாம். உங்களுக்குள் போட்டுள்ள கட்டுப்பாட்டை தளர்த்த முயலுங்கள். உங்களுக்குள் தைரியத்தை அதிகரியுங்கள். காதல் இயல்பானது. அதைத் தடுக்க முடியாது. உங்களால் ஈர்க்கப்பட்டவர் உங்களை அணுகி காதலைச் சொல்வார். தாராளமாக ஏற்கலாம்.

தனுசு

தனுசு

சில சிக்கல்களை சந்திக்கலாம். தைரியமாக எதிர்கொள்ளுங்கள். புதிய ஐடியாக்களை அமல்படுத்தும்போது கவனம் தேவை. நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டும் செய்யுங்கள். சின்ன சின்னதாக ஐடியா செய்யுங்கள். அவை ஒர்க் அவுட் ஆகும். பெரிதாக பிளான் பண்ணாதீர்கள். சொதப்பும். பலருடனும் நீங்கள் நட்பாக இருப்பீர்கள். அவர்கள் எல்லோரிடமும் பல திட்டங்களை நிறைவேற்ற முயல்வீர்கள். அதனால் சிக்கல்தான் வரும்.

மகரம்

மகரம்

உங்களது துணையுடன் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்வீர்கள். இருவருக்கும் இடையிலான அன்னியோன்யம் அதிகரிக்கும். இருவரும் பரஸ்பரம் நம்பிக்கையுடன் பழகுவீர்கள். இருவரினம் உறவும் வலுவடையும். இருவரின் நெருக்கமும் மேலும் அதிகரிக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக, ஆதரவாக இருப்பீர்கள். பெஸ்ட் துணை உங்களுக்குக் கிடைத்துள்ளது. அதேசமயம், உங்களிடம் உதவி கேட்கஉங்களது துணை தயங்கலாம். அதை புரிந்து கொண்டு நீங்களாக செய்வது நல்லது.

கும்பம்

கும்பம்

உங்களது காதலை இருவரும் வெளிப்படுத்தி நெருக்கமானவர்களிடம் அதை ஓபன் செய்ய முயற்சிப்பீர்கள். அதில் பிரச்சினை ஏதும் இருக்காது. அதேசமயம், அதில் எதிர்பாராத சிக்கல் வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது. இந்த வாரத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு சாதகமானவை. புதன்கிழமைக்குப் பிறகு எதிர்பாராத சிக்கல் வர வாய்ப்புள்ளது. கவனம்.

மீனம்.

மீனம்.

கடந்த சில வாரங்களாக பல சிக்கல்களை உங்களது காதல் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். சில முடிவுகளைக் கூட நீங்கள் எடுக்க நேரிட்டிருக்கும். அதேசமயம் உங்களது நேர்மையும் உங்களை வெகுவாகவே சோதித்திருக்கும். வார இறுதியில் காதல் உணர்வு பெருகும். சிறந்த முமுறையில் உங்களுக்கு சாதகமா்க அது திரும்பும். உங்களது நேர்மைக்கும், நியாயத்திற்கும் உங்களது துணையிடமிருந்து உற்ற பாராட்டும், பரிசும் கிடைக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Moola is very powerful nakshatra as it loves to dig deeper unto the roots of anything. Sun, Venus and Saturn.When we consider love and romance, it becomes self-destructive.In the light of this, now discover what the stars have in store for you with the love horoscope this week

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற