மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆடி முளைக்கொட்டு விழா கோலாகலம் - அலங்காரமாக உலா வரும் அம்மன்
ஆடி மாதம் திருவிழாக்களுக்கு பஞ்சமிருக்காது. மாரியம்மன் கோவில்களில் மட்டுமல்லாது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் ஆடி மாத திருவிழாக்கள் களைகட்டியுள்ளன. ஆடி முளைக்கொட்டு விழா மீனாட்சி அம்மன் கோவிலில் அமர்க்களமாக தொடங்கியுள
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.
10 நாட்கள் திருவிழா நடைபெறுவதால் மீனாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஆடி வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். விவசாயம் செழிக்க அம்மனுக்கு முளைக்கொட்டு விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை தொடங்கி பங்குனி வரை திருவிழாதான். ஆடி மாதம் அம்மனுக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

அம்மனுக்கு திருவிழாக்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

மீனாட்சி அம்மன்
விழாவின் முதல் நாளான நேற்று உற்சவர் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினார். அங்கு திருவிழாவுக்கு காப்பு கட்டிய ரவி பட்டரால் விநாயகர் பூஜை, கும்ப பூஜையுடன் யாகம் வளர்க்கப்பட்டது. அதை தொடர்ந்து காலை 10.25 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதி கொடிமரத்தில் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது.

ஆடி வீதியில் அம்மன்
மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதியை வலம் வந்தார். விழா நாட்களில் மீனாட்சி அம்மன் காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

தினசரி வீதி உலா
மீனாட்சி அம்மன் இன்று அன்னம், நாளை காமதேனு வாகனங்களில் எழுந்தருளிகிறார். நான்காம் நாள் யானை, 5ஆம் நாள் ரிஷபம், 6வது நாள் கிளி, 7வது நாள் மாலை மாற்றுதல், 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications